Home | Transcriptions of Videos
Published on Jul 09, 2019
இப்பொழுது நிறைய இருதய நோயாளிகளை பார்த்தீர்கள் என்றால் இதயத்தின் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டங்கள் குறைவாக இருப்பதினால் அவர்களால் சின்ன, சின்ன வேலைகள் கூட செய்ய முடியாது. நெஞ்சுவலி, மூச்சி வாங்குதல், சோர்வு தன்மை இவை எல்லாமே இருக்கும் ஆனால் இந்த (EECP) சிகிச்சை 35 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் இந்த சிகிச்சை 15 நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போதே இவர்களால் முன்னர் எந்த வேலையை செய்ய முடியாமல் இருந்ததோ அவற்றை எல்லாம் இப்பொழுது செய்யமுடிகிறது என்று உணர்வார்கள். இதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது என்பதினை உணர்ந்துக்கொள்ளலாம். இரண்டாவதாக (Nuclear scan) சிகிச்சைக்கு முன் மற்றும் சிகிச்சை பின் செய்வதன் மூலம் எவ்வளவு இரத்த ஓட்டம் அதிகரித்துள்ளது என்பதனை துல்லியமாக தெரிந்துக்கொள்ளலாம். மேலும் Tread mill, ECHO போன்ற சின்ன சின்ன பரிசோதனை மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்துள்ளதை தெரிந்துக்கொள்ளமுடியும்.