Home | Transcriptions of Videos

EECP சிகிச்சைக்கு பின்னர் நான் முன்னேற்றம் அடைந்ததை எப்படி தெரிந்துகொள்ள முடியும்?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

ஒரு சிகிச்சை முறையை எடுத்துக்கொள்ளும்போது அதனால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கிறதா,இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கு பல பரிசோதனைகள் இருக்கின்றது. ஒரு சிகிச்சை முறையினால் எந்த அளவுக்கு பயன் பெற்று இருக்கிறீர்கள் என்பதை பார்ப்பது (quality of life) வாழ்வாதாரம் மேம்படுத்தல், அதாவது நோயாளிகளின் அறிகுறிகளின் (symptoms) படி தெரிந்துகொள்ள முடியும். இருப்பினும் (diagnosis) மூலம் அவர்களுக்கு எவ்வளவு முன்னேற்றம் அடைந்து இருக்கிறது என்பதை கண்டுகொள்ள சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இப்பொழுது நீங்கள் ஒரு அஞ்சியோபிளாஸ்ட்டியோ, அறுவை சிகிச்சையோ செய்து கொள்ளும் போது சிகிச்சைக்கு முன்பு (angiogram) மற்றும் சிகிச்சைக்கு பின் (angiogram) செய்து பார்க்கிறார்கள். அதன் மூலம் அடைப்பை தண்டி ரத்தம் போகிறதா என்பதை பார்க்க முடியும். ஆனால் இந்த (eecp) சிகிச்சை முறை பண்ணும் போது இந்த சிகிச்சை முடிந்த பிறகு அந்த அடைப்பை தண்டி ரத்த ஓட்டம் அதிகப்படுத்தப்படுகிறது, ஆனால் அந்த அடைப்பில் எந்த வித மாற்றமும் இருக்காது,90% அடைப்பு என்றால் 90% தான் இருக்கும். ஆனால் அந்த இரத்த ஓட்டம் (blood flow) என்பது அந்த அடைப்பை தண்டி போக முடியும். இப்பொழுது இந்த சிகிச்சை முறையில் எந்த அளவு முன்னேற்றம் அடைந்து இருக்கிறது என்பதை கண்டுகொள்ள (nuclear scan) அதாவது  Myocardial perfuction என்ற பரிசோதனையின் மூலம் சிகிச்சைக்கு முன்பும், பின்பும் எடுத்துக்கொண்டால் அந்த ரத்த ஓட்டம் இதயத்திற்கு எவ்வளவு முன்னேற்றம் (improve) அடைந்த இருக்கிறது என்பதை கண்டு கொள்ள முடியும்.