Home | Transcriptions of Videos

Non-Surgical EECP: Makkal TV/Athi Naveena Sikichai/ 4th August 2018 - Part 2

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

Patient திரு. சேகர் அவர்கள் (eecp) சிகிச்சை பற்றி கூறும் கருத்து:

என் பெயர் சேகர் நான் சோளிங்கர் அருகில் வசிக்கிறேன் என் சொந்த ஊர் கூத்தம்பாக்கம் ஆகும். எனக்கு ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு (angiogram) பரிசோதனை செய்து வலை பொறுத்தும் சிகிச்சை (stent) செய்து இருக்கிறார்கள். அதில் இருந்து நான் மாத்திரைகளை சாப்பிட்டு வந்தேன். எந்த ஒரு பிரிச்சனையும் இல்லாமல் இருந்தது. மறுபடியும் நெஞ்சுவலி வந்ததன் காரணமாக நான் மருத்துவரை தனியார் மருத்துவமனையில் பார்த்தேன். அவர் என்ன சொன்னார் என்றால் "நீங்கள் சிகிச்சை எடுத்த அரசு மருத்துவமனையிலேயே சென்று பார்க்குமாறு" கூறினார். நான் அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவர் ராமசாமி அவர்களை பார்த்தேன். அவர் என்னை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு "நீங்கள் இந்த (eecp) சிகிச்சையை 35 நாளைக்கு எடுத்துக்கொண்டால் நெஞ்சுவலி  சரியாகிவிடும், உங்கள் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்" என்று கூறினார். அது என்ன சிகிச்சை முறை என்று கேட்டேன், அது (eecp) சிகிச்சை முறை என்றும், 35 நாள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும், ஆரோக்கியமாக இருக்கும்" என்றும் கூறினார்கள். முதலில் நான் கொஞ்சம் அச்சம் கொண்டேன். அந்த சிகிச்சையை எடுத்து கொள்வது எப்படி இருக்குமோ, எப்படி அந்த சிகிச்சை முறையை செய்வார்களோ என்று அச்சம் கொண்டேன். முதலில் ஒரு 4 நாளைக்கு என்னுடைய மகனை அழைத்துக்கொண்டு வந்தேன். அதன் பிறகு சாதாரணமாக (normal) நானே தனியாக வந்து, நானே சிகிச்சை முறையை எடுத்துக்கொண்டு அச்சம் இல்லாமல் சென்றேன். வீட்டில் இருக்கிறவர்களுக்கு "எந்த ஒரு பயம்மும் வேண்டாம், இந்த சிகிச்சை முறை நன்றாக இருக்கிறது, எந்த ஒரு பயமும் வேண்டாம்" என்று வீட்டில் இருக்கிறவர்களுக்கு தைரியம் கூறினேன். எனக்கு இப்போது இந்த சிகிச்சை முறையை 35 நாள்கள் எடுத்த பிறகு நன்றாக இருக்கிறது, தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து  வருகிறேன். நன்றாகவும் சாப்பிடுகிறேன், இரவில் நன்றாகவும் தூக்கம் வருகிறது, ஆனால் இந்த சிகிச்சை எடுப்பதற்கு முன் என்னால் எந்த வேலையும் செய்யமுடியாது, இப்பொழுது இந்த சிகிச்சை எடுத்த பிறகு நான் சாதாரணமாக (normal) என் வேலையை செய்து கொண்டு இருக்கிறேன். எந்த ஒரு பிரிச்சனையும் இல்லை, பயம் கொள்வதற்கு இந்த சிகிச்சையில் எந்த ஒரு ஆபத்தும் இல்லை, சாதாரணமாக இருக்கிறது, ஆரோக்கியமாக இருக்கிறது, உடம்பு முன்பை விட சிகிச்சை எடுத்துக்கொண்ட இந்த 6 மாதத்தில் நன்றாக இருக்கிறது. எந்த ஒரு பிரச்னையும் இல்லை. நான் நல்ல முறையாக சாப்பிடுகிறேன், நல்ல முறையாக இருக்கிறேன், என்  வீட்டுலையும் என்னை சிகிச்சைக்கு முன்பு தனியாக அனுப்ப மாட்டார்கள், இப்பொழுது நான் தனியாக போகிறேன், தனியா வருகிறேன். இந்த சிகிச்சைக்கு முன்பு என் குடும்பத்தில் என் மனைவி, பிள்ளைகள் எல்லோரும் நான் வெளியில் சென்றால் எங்கு எனக்கு நெஞ்சு வலி வந்து விடுமோ, என்ன ஆகுமோ, என்று நினைத்து பயம் கொள்வார்கள். இப்பொழுதும் இந்த சிகிச்சையை 35 நாள் எடுத்த பிறகு நான் தைரியமாக தனியாக போகிறேன், தனியாக வருகிறேன், என் குடும்பத்தில் என் மனைவி, பிள்ளைகள், என்னுடைய மகள்கள், என்னுடைய உறவினர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். என்னை நினைத்து எந்த ஒரு  கவலையும் இல்லை, நல்ல முறையில் பயம் இல்லாமல் இருக்கிறார்கள். எனக்கும் தைரியமாக இருக்கிறது, அவர்களும் தைரியமாக இருக்கிறார்கள்.  இந்த eecp சிகிச்சையை எடுத்த பிறகு எந்த ஒரு குறையும் இல்லாமல் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்  ராமசாமி அவர்களும் எங்களுக்கு மிகவும் உதவி செய்து, நன்றாக கவனித்து எங்களுக்கு உதவி செய்தார்கள். இந்த சிகிச்சை முறையை பற்றி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. முன்பெல்லாம் 1 கிலோ மீட்டர் தூரம்  நடந்தால் கூட மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், அதன் பிறகு அமைதியாக உட்கார்ந்து ஓய்வெடுத்து பிறகு  மறுபடியும் கொஞ்சம் நடந்தால் மறுபடியும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், இந்த EECP சிகிச்சையை எடுத்த பிறகு மூச்சு விடுவதில் பிரச்சனை எதுவும் இல்லை, 4 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். வேலையும் நன்றாக செய்கிறேன். எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.


****நன்றி****