Home | Transcriptions of Videos

Non-Surgical EECP: Siripoli TV/Naveena Maruthuvam/22nd July 2018

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இதய நோய் என்றதுமே படித்தவர் முதல் பாமரர் வரை ஒரு இனம் புரியாத அச்சம் ஏற்படுகிறது. ஏன்னெனில் மனிதனின் மரணத்திற்கு மிக முக்கிய காரணம் இதய நோயே. இதய நோய் ஏற்பட மிக முக்கிய காரணமாக அமைவது உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், புகை பிடித்தல், மது பழக்கம், மன அழுத்தம், உடல் பயிற்சி இல்லாமை,உணவு பழக்கவழக்த்தில் மாற்றம் மேலும் பரம்பரை காரணகளாலும் இதய நோய் ஏற்படுகிறது. இதய தசைக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் 3 caronery ரத்த குழாய்களில் உள்ள அடைப்பின் அளவை பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சையை தீர்மானிப்பர்.  caronery ரத்த குழாய்களில் அடைப்பின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்வார்கள். 3 ரத்த குழாய்களிலும் அடைப்பு இருந்தால் இதயம் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும். புதுமையை கொண்டு வரும் மருத்துவர்களின் முயற்சியால் சில அறிய புதிய சிகிச்சை முறைகள் இதய நோயாளிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இ இ சி பி சிகிச்சை, இருதய நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள பயப்படுவர்களுக்கு அல்லது ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் stent அறுவை சிகிச்சை செய்துகொண்டது பலன் இல்லாதவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அளவிற்கு போதிய உடல் பலம் இல்லாதவர்களுக்கு ஏற்ற ஒரு சிகிச்சை தான் eecp.

eecp சிகிச்சை முறையில் 3 ஜோடி காற்று பைகள் பொருத்தப்படும். இந்த காற்று பைகள் இருதயம் சுருங்கி விரியும் போது அதே நேரத்தில் சுருங்கி வீரியும்படி இருக்கும். இதனால் கால் பகுதிகளில் உள்ள ரத்தம் வழக்கத்தை விட அதிக வேகத்திலும், அழுத்தத்தாலும் ரத்த நாளங்கள் வழியாக இதயத்திற்கு செல்லும். இதனால் செயல்படாமல் இருக்கும் சிறிய ரத்த நாளங்கள் எளிதாக திறந்து கொள்ளும். எனவே இதயத்திற்கு முன்பு இருந்ததை விட அதிகமான ரத்த நாளங்கள் ரத்தத்தை கொண்டுசெல்லும் வகையில் அமைகிறது. இப்படி ஒரு முறை திறந்து விட படும் ரத்த நாளங்கள் நிரந்தரமாக இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் குழாய்களாக மாறி ஏற்கனவே அடைபட்ட இதய தசைகளுக்கு தேவையான ரத்தத்தை அனுப்பும் நிரந்தர பாதை ஆகிவிடுகிறது. eecp சிகிச்சை பெற்ற நோயாளிகள் இதன் பின் நன்றாக உடற்பயிற்சி செய்ய முடியும். நீண்ட தூரம் நடக்க முடியும். மருந்து மாத்திரைகளை குறைத்து கொள்ள முடியும். இந்த சிகிச்சை கு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

இதய நோய் பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறும் உரையாடல்:

heart disease, heart attack இது ரெண்டுக்கும் தான் mostly வந்து cardiologist அ வந்து patient பார்க்க வராங்க. so ஒரு patient வந்து clinic வரும் போது usfull  ல chest pain, நெஞ்சு வலி இருக்கு மூச்சு வாங்குது இது cardica problem மா இருக்குமோ னு பயமா இருக்கு னு வராங்க. அவங்களுக்கு வந்திருக்கிற வலி வந்து நெஞ்சு வலி தானா என்பதை சில question மூலம் கண்டுபிடிச்சிரலாம். eaither வந்து அவங்க வேலை செய்யும் போது வருதா, இல்லைனா வந்து எப்பவுமே அந்த pain continues ஆ இருக்கா என்பதை பார்த்துட்டு அவங்களுக்கு வந்திருக்கிறது gastic pain  ஆ அல்லது chest pain ஆ என்பதை கண்டுபிடிக்க முடியும். அப்படி முடியலைன்னா என்ன பண்ணுவோம் ஒரு ecg எடுப்போம். ecg எடுக்கறதனால வந்து அந்த நெஞ்சு வலி வந்து cardiac pain ஆ என்பதை வந்து 100% சொல்ல முடியாது. அதனாலதான் mostly ஒரு ecg பண்ணி முடிச்ச பிறகு கூட ஒரு tmt பண்ணிக்கோங்க னு சொல்றோம். அந்த tmt ல என்ன பன்றோம் னா tread mill ல ஒரு patient  அ ஓட வைக்கிறோம். அப்படி ஓடும் போது அந்த ரத்த ஓட்டம் வந்து அவர் exasise கு ஏற்றார் போல அந்த ரத்த ஓட்டம் அதிகமாகனும். இப்ப அவரோட ரத்த குழாய் ல அடைப்பு இருந்துதுன்னா அந்த tread mill ல ஓடும் போது அந்த ரத்த ஓட்டம் அந்த exasise கு ஏற்றார் போல அதிகம் ஆகாது. ஏனா வந்து  ஒரு 70, 80% upstrcation இருந்ததுனா ரத்தம் போகாது. அப்ப வந்து அந்த tread mill நடக்கும்போது ecg ல சில time changes இருக்கலாம் அல்லது அந்த patient கே வந்து chest pain வரலாம். அதை தான் நம்ம வந்து tmt positive னு சொல்றோம். இப்ப echo cardiograffy ஏத்துக்காக பன்றோம் னா உங்க heart உடைய pumping function வந்து ஏதாவது affect ஆகி இருக்கா என்பதை பாக்கறதுக்கு. எதை எல்லாம் வைத்து ஒரு patient வந்து இதய நோய் இருக்கா இல்லையா என்பதை கண்டுபிடிச்சிரலாம். இப்ப once அந்த இதய நோய் இருக்கா இல்லையா என்பதை கண்டுபிடிச்ச பிறகு அந்த patient உடைய symptoms கு ஏற்றார் மாதிரி, எனக்கு நடக்க முடியல doctor, நெஞ்சு வலிக்குது அப்படி சொல்லும்போது சில மருந்து மாத்திரைகளை அந்த patient கு கொடுக்கிறோம்.

அந்த மருந்து மாத்திரைகள் அதுக்கு அப்பறம் colastral, sugar, regular exsasise, food control, stress releving இத மாதிரி பல steps அ சொல்லி கொடுத்து இதன் மூலம் வந்து அவங்களுடைய cardica disease அ கட்டுப்படுத்த பாக்கறோம். Mostly நிறைய patient வந்து இந்த sugar control, colastral control plus medicine இதுலயே அவங்களுடைய நெஞ்சு வலி குணம் ஆகிவிடும், அவங்களால regular ஆ walk பண்ண முடியும். அப்படி இருந்தாலும் சில மாத்திரைகளை அவங்க life long சாப்பிடணும். இதுல சில பேருக்கு வந்து இத்தன மருந்து மாத்திரைகள கொடுத்து, நாங்க sugar control பண்ணோம் doctor, colastrol control பண்ணோம் doctor, நீங்க சொல்றா மாதிரி regular ஆ walk பன்றோம் ரொம்ப stress ஆகிறது இல்ல இருபினும் எனக்கு மறுபடியும் மறுபடியும் chest pain வந்துகிட்டே இருக்கு னு சொல்லும்போது என்ன நினைபோம் னா ஒரு angio கிராம் பண்ணி பார்க்கலாம் அப்படி னு முடிவு பன்றோம். இப்ப தான் அந்த patient கு வந்து they should know என்ன management பண்ண போறாங்க னு அந்த patient கு முன்னாடியே தெரியணும். அப்ப தான் வந்து next என்ன treatment சொல்ல போறாங்களோ அத வந்து patient னால accept பண்ண முடியும். இப்ப angio gram னு ஒரு cardiology சொன்ன பிறகு இப்ப எதுக்காக angio gram செய்யறோம் னா, உங்க ரத்த குழாய் ல எந்த எந்த இடத்துல அடைப்பு இருக்குது என்பதை பார்ப்பதற்குத்தான் angio gram . இப்ப question என்ன னா ஒரு patient வந்து எதுக்கு doctor angio கிராம் செஞ்சி என்னோட ரத்த குழாய் ல எங்க எங்க அடைப்பு இருக்றத எதுக்காக பார்க்கணும்? அப்படி னு கேக்கலாம். இப்ப என்னனா இப்ப வந்து ஒரு patient வந்து angio gram கு ready ஆயிட்டாரு என்றாலே அந்த patient கு வந்து eaither ஒரு bypass surgery யோ, angio plasty யோ செய்ய முடியுமா முடியாதா eaither bypass அவருக்கு சிறந்ததா இல்லை என்றால் angio plasty சிறந்ததா என்று த பார்ப்பதற்குத்தான் நாம angio gram மே செய்யறோம். so அந்த மாதிரி நேரத்துல வந்து patient வந்து angio gram னு சொன்ன பிறகு they should ready for bypass surgery or angio plasty. இப்ப இங்கேயே வந்து சில patient வந்து என்ன நினைகிறார்கள் என்றால்,doctor எனக்கு எந்த அடைப்பு இருந்தாலும் எனக்கு stending proseeger வேண்டாம், bypass surgery வேண்டாம் னு முடிவு பண்ணிட்டாங்க னா அவங்கள இன்னும் medical management லேயே கொண்டு போகணும். இப்ப இந்த மாதிரி patient கு வந்து இதயத்துக்கு சரியாக ரத்த ஓட்டம் போக வில்லை. அதனால தான் அவருக்கு ecg ல தெரியிது, இல்லனா வந்த  tread mill ல pasitive இருக்கு, நெஞ்சு வலி வருது இல்லனா echo ல பிரச்சனை இருக்கு. இப்ப இந்த patient கு வந்து angio gram பண்ண முடியாது, பண்ண வேண்டாம் னு சொல்லிட்டாரு ஆனால் இன்னும் வலி இருக்கு னா, இந்த மாதிரி நேரத்துல இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதற்காக வந்திருக்கும் ஒரு புதிய சிகிச்சை முறை தான் இந்த eecp என்ற  சிகிச்சை முறை. it is call enhanced external counter pulsation.

eecp சிகிச்சை முறையை பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் உரையாடல்:

Enhanced External Counter Pulsation. இந்த சிகிச்சை முறைல என்ன பன்றோம் னா கால் ல வந்து 3 sets of cuff அத போட்டு கால்ல இருக்கற ரத்த ஓட்டத்த slow ஆ அதிகப்படுத்துறோம் இதயத்திற்கு. இத வந்து daily 1 மணி நேரம் வீதம் 35 நாள் எடுக்கும் போது ரத்த ஓட்டம் இதயத்திற்கு natural ஆகவே அதிகமாகுது. எப்படி அதிகமாகுதுன்னா உங்க ரத்த குழாய் ஐ சுற்றி நுண்ணீய ரத்த ஓட்டங்கள், cholesterol னு சொல்லுவோம், அந்த cholesterol வந்த நீங்க நடக்க நடக்க அந்த vessels எல்லாம் open ஆகும். ஆனா இந்த மாதிரியான cardiac patient கு என்ன பிரச்னை னா, doctor நான் மருந்து சாப்பிடுகிறேன் என்னால வந்து 5, 10 நிமிடம் கூட நடக்க முடியல, நடந்தா pain வந்துருது அதனால என்னால நடக்கவே முடியாது னு சொல்ராங்க. இப்படி பட்ட patient இந்த eecp சிகிச்சை செய்யும்போது என்ன ஆகுது னா ரத்த ஓட்டம் வந்து இதயத்திற்கு எல்லா இடத்துக்கும் அதிகமாகுது. இந்த சின்ன சின்ன ரத்த நாளங்கள் சொன்னேன்ல அந்த ரத்த நாளங்கள் லாம் கொஞ்சம் கொஞ்சம் மா விரிவடைகிறது. அது மட்டுமல்லாமல் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் போது புது புது vessels உம் அடைப்பை சுற்றி form ஆகுது. இத தான் natural bypass னு சொல்றோம். இதுக்காக eecp பண்ணத்தான் இதல்லாம் வருமா னு கேட்ட, தேவையில்லை. நிறைய பேறுக்கு வந்து இது natural ஆ வே form ஆயிடுது. அதனால தான் வந்து ஒரு general check up கு போகும்போது, doctor நான் general check up கு போனேன், ct angio பண்ண அதுல 4 block இருக்கு ஆனா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நெஞ்சு வலி இல்ல னா, block வந்து அவருக்கு 15 வருஷமா இருந்திருக்கலாம், இருந்தாலும் natural ஆகவே regular walking, execasise பன்றதுனால அந்த natural ஆகவே cholesterols form ஆகியிருக்கும்.

இந்த cholesterols நிறைய பேருக்கு form ஆகறது கிடையாது. அதனாலதான் அவங்களுக்கு நெஞ்சு வலி வருது. இப்ப இந்த eecp பண்ணும்போது அந்த cholesterols அதிகமாகறதன் மூலம் அந்த patient ஓட நெஞ்சு வலி கம்மி ஆயிடுது, medicine நும் eecp இன் மூலமே வந்து அவங்களுடைய எல்லா symptoms யும்  control பண்ணிடலாம்.

இப்ப அடுத்த வகையான patient அ பார்ப்போம். இவங்க angio கிராம் செய்ஞ்சுகிறாங்க. செய்த பிறகு  anjio plasty யோ, bypass ஓ ஏதாவது தேர்ந்தெடுத்து அந்த processer பண்ணிக்கிறாங்க. ஒரு stent போடறமோ, bypass surgery போடறமோ இதுவும் வந்து permanent ஆனா solution கிடையாது. reasion என்னனா உங்க ரத்த குழாய் உடைய அடைப்ப ஒரு graft போட்டு bypass பன்றாங்க. அது தான் bypass surgery. இல்லனா ஒரு stent வச்சு open பன்றாங்க. ஏன் வந்து இத முழுமையான quear இல்லனு சொல்ல்கிறோம் னா இப்ப உங்களுக்கு செய்த proceger வந்து இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதற்கு மட்டும் தான் செய்கிறோம். உங்களுடைய நோய் என்னனா உங்க ரத்த குழாய் யில் அடைப்பு ஏற்பட்டதுதான் உங்க நோய். அந்த நோய் ய  வந்து bypass ஓ,angio plasty ஓ குணப்படுத்துவது இல்லை. உங்க tentansi to form upsticksion னு சொல்லுவோம். so என்ன பன்றது ஒரு bypass, angio plasty செய்து கொண்டாலும், இப்ப செய்துகொண்ட vessels இருந்து மற்ற ஒரு vessels ல மறுபடியும்  அடைப்பு ஏற்படலாம். அப்ப மறுபடியும் நெஞ்சு வலி வரும், அப்ப மறுபடியும் bypass, anjio plasty செய்யவேண்டும்படியாக இருந்தால் செஞ்சிதான் ஆகணும். அப்படி இல்லனா போட்ட stent ஓ graft ஓ நாளடைவில் அது close ஆவதற்கு chance அதிகம். எந்த graft ம் life long னு சொல்ல முடியாது. சில சமையம் நாம பாத்திருக்கோம் நிறைய patient லாம் நம்ம பாத்திருக்கோம் 3 மாசத்துக்கு அப்பறம் வந்து surgery ல போட்ட graft close ஆயிடுச்சி னு வராங்க, சில பேரு 5 வருஷத்துக்கு அப்பறம் வராங்க, சில பேரு 10வருஷத்துக்கு அப்பறம் வராங்க. useful வந்து இந்த graft கும் life இருக்கு. it is not a life long quar. so அப்படி இருக்கும் பொழுது ஒரு bypass ஓ angio plasty யோ செய்து கொண்டாலும் மறுபடியும் நெஞ்சு வலி வரும் பொழுது அவங்களுக்கு வந்து வேற வழி யே கிடையாது. மறுபடியும் நெஞ்சு வலி வரும் பொழுது மறுபடியும் surgery, மறுபடியும் angio plasty னு போவதற்கு பதிலா அந்த நேரத்திலையும் உங்க surgen ஓ, cardiologist ஓ பார்த்துட்டு இனிமே surgery பண்றத விட eecp பண்ணாலே ரத்த ஓட்டம் அதிகமாகும் னு சொல்லி சொல்ல முடியும். so இந்த eecp முறை வந்து சில பேருக்கு angio gram செய்யறதுக்கு முன்னாடியே செய்யறோம், சில பேருக்கு bypass, angio plasty பண்ணி முடிச்ச பிறகும் அவங்களுக்கு symptoms வரும் போது eecp சிகிச்சை பன்றோம்.

இப்ப இனொரு group பார்ப்போம். இவங்க என்ன சொல்ராங்க, angio gram பண்ணிக்கறாங்க vessels block இருக்காங்கறதா கண்டுபிடிச்சிறாங்க இருந்தாலும் சில பேருக்கு வந்து இந்தியா ல வந்து very coman ஏன இங்க diabaties அதிகமா இருப்பதனாலும், நம்மளோட coranary arties அதாவது ரத்த நாளங்கள், இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை கொடுக்கக்கூடிய ரத்த நாளங்களை தான் coranary arties னு சொல்லுவோம். இந்த coranary arties வந்து சின்னதா இருக்கு அப்பறம் வந்து நோய் வரும் போது defused ஆ, full vessels leanth ளையும் வந்து leasience இருக்கு இப்படி இருக்கும் போது வந்து ஒரு surgen னால ஒரு graft ஏ போட முடியாது. stending னு போனாலும் அது defused இருக்கறதுனால வந்து அந்த எடத்துல stent உம் போட முடியாது. so இவங்க என்ன பண்ண முடியும், surgery யோ angio plasty யோ செய்து கொள்ள ready தான் இருகாங்க ஆனா surgery யோ angio plasty யோ எதுவும் செய்ய முடியாது. காரணம் அவங்களோட coranary anatamy அந்த ரத்த நாளங்கள் அந்த மாதிரி இருக்கு. அப்படி இருக்கும் போதும் அவங்களுக்கு best treatment சொன்ன இந்த eecp சிகிச்சை முறை தான். இந்த மாதிரி patient உம் நிறைய பேர் வந்து இந்த eecp சிகிச்சை முறை ய எடுக்கறாங்க.

இத எல்லாம் விட்டிட்டு அடுத்தது ஒரு group இருகாங்க. இவங்களுக்கு என்னனா patient கு heart attack வந்திடுது அதாவது முதல நெஞ்சு வலி என்பது வந்து ஒரு heart attack ஆக மாறி அந்த heart attack வந்த பிறகு என்ன ஆகுதுன்னா immediat ஆ அவங்களுடைய heart உடைய pumping function, அதாவது heart attack enbathu என்னனா இதயத்தோட massels அந்த massels வந்து இறந்து விடுகிறது (dead). Once that  massels is dead it cannot be recovered. அதுக்கு அப்பறம் அத நம்ம ஒண்ணுமே செய்யமுடியாது. அதனால என்ன ஆகுதுன்னு அந்த heart ஓட pumping, pumping vanthu அந்த massels ஓட stenth அ பொறுத்து இருக்கு. அந்த massels வந்து stenth அ இழந்திருச்சினா அந்த heart ஆல regular ஆ pump பண்ண முடியாது.

அப்படி pump பன்னலான அந்த total heart ஓட eafikasi குறைந்து விடும். இத தான் இருதய செயல் இழப்பு (Heart failer) னு சொல்றோம். அதாவது herat failer னா வந்து heart complete நின்றது கிடையாது. இந்த heart failear னா என்ன meaning னா heart அதோட regular pumping function ல இருந்து கொஞ்சம் கொறஞ்சிடுது னு அர்த்தம். சில பேருக்கு வந்து 65% இருந்து 40% ஆக இருக்கலாம். ஒரு 40% வந்த பிறகே அத heart failer னு சொல்றோம். சில சமையம் 40% இருந்து 30% இருக்கலாம், சில சமையம்  30% கும் கிழ  20% உம் இருக்கலாம். so இந்த இருதய செயல் இழப்பு ஆனா பிறகு அந்த massels damage complete ஆ ஆயிடுச்சு னா மறுபடியும் bypass surgery யோ, angio plasty யோ செய்துகொள்வது வந்து எந்த பலனையும் அந்த patient கு தராது. so என்னோட massels vanthu complete ஆ dead ஆயிடிச்சா இல்லனா இன்னும் சில இடத்துல வந்து ரத்த ஓட்டம் கொடுத்தால் அந்த pumping improve ஆக முடியுமா இத பாக்கறதுக்குத்தான் nuclear scan னு சொல்லுவோம். அந்த nuclear scan ல வந்து dai அ inject பண்ணி எந்த இடத்துல வந்து ரத்த ஓட்டம் போகுதா இல்லையா என்பதை assess பண்ண முடியும்.  இப்படி இருக்கும் போது இந்த இருதயத்தோட செயல் இழப்பு இருப்பவர்கள் வந்து எந்த proseeger பண்ணாலும் ஒரு bypass ஓ, angio plasty யோ, angio gram ஓ எது செய்துகொண்டாலும் அந்த risk வந்து normal லா உள்ள patient விட 2 to 3 மடங்கு அதிகம். so அப்படி இருக்கும்போது இவ்வளவு risk யும் எடுத்து ஒரு surgery யோ, angio plasty யோ பண்ண முடியாத நிலைமயிலையும் வந்து eecp என்ற இந்த சிகிச்சை முறை வந்து அவங்களுக்கு கைகொடுக்கும். இந்த மாதிரி patients பல பேரு eecp சிகிச்சை முறையை செய்துகொண்டு அந்த overall pumping function improvement உம் இருக்கும், அதுக்கப்புறம் அவீங்களோட quality of life, மூச்சு வாங்கறது இது எல்லாமே நல்ல improve ஆகிடும்.

கடைசியாக இன்னும் ஒரு group of patients. இவங்களுக்கு என்னனா bypass surgery பண்ண முடியும், angio plasty பண்ண முடியும் அனால் அவங்களுடைய உடல் வந்து அவங்களுக்கு ஒத்துழைக்காது. காரணம் வந்து elderly age சில பேரு வந்து 70 வயதுக்கு மேல இருப்பாங்க, அந்த மாதிரி வயது ல இருப்பவர்களுக்கு bypass ஓ angio plasty ஓ செய்துகொண்டால் risk தான் அதிகமாகும். அதனால வந்து avoide பண்ணலாம். இல்லனா வந்து other problem அவருக்கு வந்து coranary artiry dissess இருக்கும் கூடவே ஆஸ்துமா இருக்கும், இல்லனா lever problem இருக்கும், இல்லனா ஒரு cancer, இல்லனா kidny problam. இப்படி பல other problem இருக்கும் போது ஒரு surgery பண்ணும்போது risk அதிகமாகும். so இந்த மாதிரி நேரத்துலையும் eecp சிகிச்சை முறை அவங்களுக்கு கை கொடுக்கும். so இந்த eecp சிகிச்சை முறை ய பற்றி எல்லா patient உம் வந்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஏன்னா இது வந்து அவங்க உயிர் ர மட்டும் காக்க போறது இல்ல ஒரு expensive, high risk bypass surgery, angio plasty  அ தவிர்க்கவும் இது வந்து ரொம்ப உதவும். so இந்த eecp சிகிச்சை முறையை பற்றி எல்லா patient உம் வந்து அவங்க surgen ஓ doctor கிட்ட பேசும் பொழுதோ அவங்களுடைய options இப்ப வந்து உங்களுக்கு heart problem இருக்கு, உங்களுக்கு treatment கொடுக்கணும் சொல்லும் போது இந்த eecp சிகிச்சை முறைக்கு நாங்கள் உகந்தவர்களா என்று அந்த patient வந்து அவங்க doctor ட discess பண்ணும்  போது உங்களுக்கு இன்னும் பல information வந்து அந்த doctor மூலம் கிடைக்கலாம். அதனால இந்த eecp சிகிச்சை முறை என்பது ஒரு simple ஆ சொல்லனும்னா it is a life saving treatment. உங்களின் உயிர் ரை காக்கும் மருத்துவ முறை. இதை எல்லா patient உம் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்க வந்து bypass, angio plasty surgery கு போகறதுக்கு முன்னாடி இந்த சிகிச்சை முறையை பற்றி உங்க surgen கிட்டை யோ cardilogogist கிட்டை யோ details ஆ discess பண்ணி அதுக்கு அப்பறம் நீங்க உங்க desision எடுக்கறது நல்லது.

Patient திரு. விஜயகுமார் பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கருத்து:

இவர் patient திரு. விஜயகுமார் 62 வயது. 2008 ல அவருக்கு heart attack ஆகி immediat ஆ angio gram பண்ணாங்க. அப்ப வந்து bypass surgery பண்ணனும் னு சொல்லிட்டு patient உம் 2008 ல bypass surgery பண்ணிகிட்டாரு. அதுக்கப்பறம் ஒரு 5 வருஷம் வரைக்கும் நல்லா இருந்தாரு. அப்பறம் 2013 வந்து மறுபடியும் siver pain வர ஆரம்பிச்சிருச்சு. அவரால 15 நிமிடம் கூட நடக்க முடியல. அதுக்கு அப்பறம் திருப்பி பார்த்ததுல மறுபடியும் bypass surgery பண்ண வேண்டாம் ஏனா அவங்க heart function னும் கொஞ்சம்  கம்மியா இருக்கு bypass surgery பண்ணா risk அதிகம் என்பதால் நீங்க மருந்து மாத்திரையே சாப்பிடுங்க னு சொல்லிட்டாங்க.

அப்ப வந்து இந்த eecp சிகிச்சை முறை இருக்கறதுனால நீங்க இந்த eecp முறையவே எடுத்துக்கோங்க னு அங்க உள்ள cardiologist பரிந்துரைத்தாங்க. Patient உம் 35 நாள் eecp சிகிச்சை முறையை செய்தாரு. செஞ்சு முடிச்ச பிறகு அவர் நெஞ்சு வலி இல்லாம நல்லா இருந்தாரு. இப்ப வந்து 5 வருஷம் கழித்து அவர் evaluvation வரும் போது lite ஆ pain இருக்கு னு சொன்னாரு. but அதனால வந்து அவருடைய heart function னு கம்மியா இருக்கு, ஏற்கனவே surgery உம் பண்ணி இருப்பதனால் இன்னொரு 35 days வந்து preventive வா eecp சிகிச்சை பண்ணிகொங்கனு சொன்னோம். அந்த 35 days eecp சிகிச்சையும் பண்ணிட்டாரு. இந்த patient வந்து ஒரு tipical example அதாவது வந்து ஒரு surgery செய்துகொண்டால் மட்டுமே வந்து குணமாக முடியாது. ஏன்னா அந்த graft வந்து மறுபடியும் அடைப்பு ஏற்படலாம். அது வந்து natural ஆகவே ஏற்படலாம். இப்ப இவர்க்கு இந்த eecp சிகிச்சை எடுத்ததனால வந்து மறுபடியும் வந்து அவரால 5 வருஷம் நல்லா இருந்தாரு. இப்பவும் வந்து மறுபடியும் வந்து  preventive வா ஒரு 5 வருஷம் கழித்து எடுத்துகிட்டாரு. அதனால வந்து இந்த eecp சிகிச்சை முறை ல வந்து எந்த risk உம் இல்லாததுனால preventive ஆ 5 வருஷத்துக்கோ 6 வருஷத்துக்கு ஒரு முறையோ இந்த eecp சிகிச்சை முறையை எடுத்துக்கொள்ளலாம். eecp சிகிச்சை வந்து நிறைய பேரு வந்து bypass surgery சொல்ற patient வந்து second oppenion காக  இந்த eecp சிகிச்சை முறையை தெரிந்து கொள்வதற்காக வராங்க. அவன்களுக்குளேயே ஒரு avarness இருக்கு. என்ன நினைக்கிறாங்கன்னு ஒரு patient eecp சிகிச்சையை பண்ணிட்டு இதயத்துக்கு ரத்த ஓட்டம் வரதுனால நாம surgery ய avoide பண்ணலாம், postmen பண்ணலாம் னு நிறைய பேரு வராங்க. அந்த மாதிரி patient கும் நாங்க eveluvate பண்ணும் போது அதுல பல patient வந்து eecp சிகிச்சை யே போதுமானதாகும். அவங்களுக்கு surgery தேவையில்லை. சிலருக்கு surgery தேவைப்பட்டாலும் நீங்க eecp சிகிச்சை பன்றதுனால வந்து surgery ய postman பண்ணிக்கலாம், மேலும் வந்து இந்த ரத்த ஓட்டம் அதிகமாகிறதுனால வந்து surgical risk உம் அதாவது அவர்கள் மீண்டும் surgery செய்துகொள்ள வேண்டும் என்றாலும் அந்த risk வந்து ரொம்ப குறைந்து விடும். ஏன்னா வந்து இப்ப இதயத்துக்கு வந்து natural வே ரத்த ஓட்டம் அதிகமா இருப்பதனால் அந்த surgical proseeser risk கும் கம்மீயாக வாய்ப்புகள் அதிகம்.

Patient  திரு. விஜயகுமார் அவர்கள் இந்த eecp சிகிச்சை முறையை பற்றி கூறும் கருத்து:

என் பெயர் விஜயகுமார் நான் விருதுநகர் லே இருந்து வந்து இருக்கேன். 2008 ல வந்து open heart surgert பண்ணிக்கொண்டேன். மறுபடியும் 5 வருஷம் ஆயிடுச்சி. 5 வருஷம் கழித்து 2013 ல வந்து மறுபடியும் check up கு வந்தேன். ரொம்ப மூச்சு வாங்கிச்சி, படி ஏறுவதற்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்ப மறுபடியும் check up பண்ணிட்டு doctor கிட்ட கேட்டேன். அவரு doctor என்ன சொன்னாரு னா இப்ப eecp னு ஒரு treatment வந்திருக்கு அது வந்து நீங்க வயசு வேற 62 னு சொல்றிங்க அதனால இப்ப வந்து  திரும்ப வந்து bypass surgery யோ, open surgery யோ பண்ணமுடியாது உடம்பு வந்து உங்களுக்கு தாங்க கூடிய சக்தி இருக்காது அதனால இந்த eecp பண்ணீங்கன்னா உங்களுக்கு நல்லது மேலும் உங்களுக்கு bypass பண்ணி உங்க உடம்பு எப்படி 5 வருஷம் வரை ஒத்துழைச்சிதோ அது மாதிரி ஒத்துழைக்கும், நல்லா இருக்கும் னு சொன்னாரு. அத வச்சி நான் வந்து பண்ணிக்கறேன் சொல்லி சொல்லியிருந்தேன். அப்பறம் 2013 ல வந்து இந்த treatment எடுத்தேன், 35 நாள் இந்த treatment கொடுத்தாங்க. treatment கொடுக்கும்போது ஒரு 6 படி, 8 படி ஏறிக்கிட்டு இருந்தேன். முதல treatment கு முன்னால அப்பறம் அதுக்கு பிறகு ஒரு 10 நாள் கூட கூட ஒரு 10 படி, 12 படி ஏற ஆரம்பித்தேன். அந்த மாதிரி 35 நாள் ஆனா உடனே கொஞ்சம் தெம்பா நடக்க வைக்க இப்ப 60 படி எல்லாம் ஏறி வந்திடுவேன். முதல ஒரு 6 படி, 10 படி ஏறத்துக்கே ரொம்ப சிரம பட்டேன். இப்ப இந்த eecp treatment பண்ண உடனே இப்ப சர்வ சாதாரணமாக 60 படி ஏறி வரேன். ஒரு 1 மணி நேரத்துல ஒரு 3 கிலோ மீட்டர் நடந்திருவேன். அந்த 1 மணி நேரம் நடந்த நேரத்துலேயே ஒரு 15 நிமிடம் exssice பண்ணுவேன். உடம்புக்கு நல்லா வும் இருந்தது. அதனால இந்த eecp treatment  நல்லா இருந்தது. அந்த நம்ம bypass surgery, open surgery  பண்ணம்போது எப்படி இருந்தானோ அந்த இது வந்து இந்த eecp treatment ளையும் எனக்கு  நல்லா 5 வருஷம் நல்லா ஒத்துழைப்பு இருந்தது.

ஆனா  என்ன கொஞ்சம் ஊடைல கொஞ்சம் control இல்லாம சாப்பாடு வகைகள் இது ஊடைல, உடம்பு தான் நல்லா இருக்குல்ல அதனால walking போகாம விட்ருவோம் கொஞ்ச நாள் walking போகாம ஒரு control இல்லாம என் உடம்ப நானே ஒரு மாதிரி இது ஆக்கிக்கிட்டேன். அப்பறம் இப்ப வந்து eecp 2013 ல பண்ணிட்டு இப்ப வந்து 5 வருஷம் ஆகிவிட்டது. இப்ப 2108 வந்து 2மாசம் முன்னாடி 35நாள் treatment எடுத்திருக்கேன். இப்ப எடுத்த பிறகு முழு இதா நல்லா இருக்கேன். உடல் ஆரோக்கியமா இருக்கு. நல்லா நடக்கிறேன். வேலைகளும் நல்லா செய்யமுடிகிறது. நல்லா இருக்குது இப்ப. இப்ப இன்னொன்னு என்ன சொல்றேன் னா eecp நம்ம பார்க்கும்போது அவங்க treatment பார்க்கும்போது நமக்கே ஒரு மாதிரி பயமா இருந்தது. என்னடா வலிக்குமோ, belt எல்லாம் போடறாங்க எப்படியோ இருக்குமோ அப்படினு பயந்தேன். ஆனால் முதல் நாள் treatment எடுக்கும்போதே எனக்கு சந்தோஷமா இருந்தது, நல்லா இருந்தது. இரண்டாவது வந்து நம்ம doctor வந்து நம்மள கவனிப்பு நல்லா கவனிக்கிறாரு. அடுத்தது sister மார்கள் ஒரு 6 sister மார்கள் இருகாங்க. எல்லாருமே machine ஓடினாலுமே பக்கத்திலேயே இருந்து நம்மள அவ்வளவு, வலி இருந்தா சொல்லுங்க sir, உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தா சொல்லுங்க sir  னு சொல்லி நிறைய நமக்கு ஒரு ஒத்துழைப்பு கொடுக்குறாங்க, நமக்கு வந்து ஒரு ஆர்வமா வந்து செய்யறத பாக்கறதுக்கு, அங்க வந்து treatment செய்யலாம் நல்லா இருக்கு அப்படி னு சொல்லி அங்க treatment  பண்றதுக்கு ஆர்வம் இருக்குது.

Patient திரு.ஸ்ரீனிவாசன் பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கருத்து:

Patient திரு.ஸ்ரீனிவாசன் 63 வயசு இவருக்கு 2008 வந்து sivere ஆ chest pain வந்தது னு சொல்லிட்டு angio gram பண்ணாங்க. angio gram பணத்துல வந்து 3 vessels ளையும் அடைப்பு இருந்தது. ஆனாலும் அந்த அடைப்பு வந்து defused னு சொல்லுவோம். அதாவது எல்லா patient கும் bypass surgery பண்ண முடியாது. இந்த patient கு tipical லா 3 vessels ளையும் அடைப்பு இருந்தாலும் அவருக்கு bypass surgery பண்ண முடியாது. ஏனா வந்து அந்த graft பண்றதுக்கு வந்து vessels வந்து thin ஆ இருந்தாலோ இல்லனா defused ஆ leasion இருந்தாலோ அந்த bypass surgery பண்ண முடியாது. சரினு medical management லேயே 2008 இருந்து 2018 வரை 10 வருஷமா medical management லேயே இருந்தாரு. ஆனா இப்போ recent ஆ siver ஆ மூச்சு வாங்குது னு சொல்லிட்டு hospital ல admission ஆகியிருக்காரு. இதுக்கப்புறம் echo பண்ணி பார்த்ததுல வந்து அவரோட heart pumping evficancy அதாவது pumping function வந்து ரொம்ப குறைந்து இருந்தது. அதாவது 35% கும் கிழ இருந்தது. திருப்பி வந்து angio பண்ண வேண்டாம் ஏனா ஏற்கனவே surgry பண்ண முடியாது னு தெரியும்.so வந்து இந்த eecp சிகிச்சை யே பண்ணலாம் னு சொல்லிட்டு இந்த eecp சிகிச்சையை start பண்ணாங்க. பண்ணி இப்ப 35 நாள் முடிச்சிட்டு இப்ப 3 மாச follow up கு வந்திருக்காங்க. முன்னாடி இருந்தா மாதிரி அவருக்கு மூச்சு வாங்கறது எல்லாம் இல்ல. இப்ப நல்லா நடக்கிறாரு, நல்லா வும் இருக்காரு. மருந்து மாத்திரைகளை எல்லாம் correct ஆ சாப்பிடுகிறாரு. salt restiction salt கொஞ்சம் கம்மியா, water restiction நீரும் வந்து 1 litter கு மேல குடிக்கக்கூடாது இது எல்லாத்தையும் follow பண்ணிக்கிட்டு இருக்காரு. இப்ப வந்து treatment கு அப்பறம் வந்து patient ரொம்ப நல்லா இருக்காரு.

Patient  திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் eecp  சிகிச்சையை பற்றி கூறும் கருத்து:

என் பெயர் ஸ்ரீனிவாசன் வயது 63. அரசாங்க போக்குவரத்து துறை யில் நடத்துனராக இருந்தவன். 36 வருஷ service. எனக்கு வந்து கடந்த 2008 யில்  heart ல அடைப்பு இருந்ததாக angio லாம் பண்ணி பார்த்துட்டு ஒன்னும் செய்ய முடியாது, operaction பண்ண முடியாது ஆனா 3 அடைப்பு இருக்கு அப்படினு சொன்னாங்க. கேட்ட operaction பண்ற உங்களுக்கு இதுஎல்லாம் சரி இல்ல. அப்படி னு சொன்னாங்க. அதுக்கப்பறம் ரொம்ப கஷ்டம்தான். கஷ்டப்பட்டு மூச்சு விட முடியாம கொஞ்ச தூரம் நடந்தா மூச்சு விட முடியாம அப்படியே நிப்பேன். அப்பறம் நின்னு திரும்ப walk பண்ணுவேன். சாப்பாடு கூட சரியா எடுக்கறதில்ல. அந்த மாதிரி இருந்த சூல்நிலையில ஒரு friend ஒருத்தர் எனக்கு அறிமுகம் ஆனவர் இந்த மாதிரி ஓமந்தூரார் hospital ல doctor வந்து இந்த மாதிரி eecp பன்றாங்க அங்க போனீன்னா உனக்கு சரி ஆகும் அப்படினு சொன்னாரு. சரி நானும் doctor sir அ பார்க்க போற நேரத்துல ரொம்ப மூச்சு வாங்கிட்டு இருந்தது. குனிய முடியாது, நடக்க முடியாது, கொஞ்சம் ஏதாவது heave அ பண்ணனும்னு சொன்னா கூட அதுவும் முடியாது.

அப்படி ஒரு சூழ்நிலையில்தான் doctor sir அ பார்த்தேன். எனக்கே ஒரு புரியாத ஒரு புதிர் ஆச்சிரயமா 3 நாள் treatment லேயே மூச்சு வாங்கறது நின்றுவிட்டது. அதுக்கு பிறகு அந்த treatment அ தொடர்ந்து பண்ணிட்டு வந்த பிறகு ஒரு நம்பிக்கைல இடைல ஒரு 10 நாள் gap கொடுத்து sir நான் ஒரு long ஆ journy போனும் sir அப்படினு கேட்டேன். காசி வரைக்கும் போய் திரும்பி வந்துட்டு திரும்ப அத continue பண்ணதுக்கு இப்போ all round எங்க வேண்ணாலும் போக முடியும். நடக்க முடியும் நல்லா சுவாசிக்க முடியும். எல்லா விதமான திருப்த்தி யும் என்னக்கு இருக்கு. உண்மையிலேயே எனக்கு இத அறிமுகப்படுத்தின என் நண்பருக்குத்தான் நன்றிய சொல்லணும். அவ்வளவு அருமையான treatment doctor sir வந்து சரியான படி எனக்கு செஞ்சு கொடுத்து இருகாங்க.