Home | Transcriptions of Videos

Non-Surgical EECP: Vijay Super/Maruthuva Neram/15th July 2018

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இதய நோய் என்றாலே படித்தவர் முதல் பாமரர் வரை ஒரு இனம் புரியாத அச்சம் ஏற்படுகிறது ஏனென்றால் மனிதனின் மரணத்திற்க்கு மிக முக்கிய காரணம் இதய நோய் .இதய நோய் ஏற்பட மிக முக்கிய காரணமாக அமைவது உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், புகை பிடித்தல், மது பழக்கம், மன அழுத்தம்,உடல் பழிற்ச்சி இல்லாமை,  உணவு பழக்க பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுதல் ,மேலும் பரம்பரை காரணங்களாலும் இதய நோய் ஏற்படுகிறது இதய தசைக்கு ரத்தைதை எடுத்து செல்லும் மூன்று கரோனரி ரத்த குழாழ்களில் உள்ள அடைப்பின் அளவைப் பொறுத்து மருத்துவர்கள் சிக்கிச்சையை தீர்மானிப்பார்கள் கரோனரி ரத்த குழாழ்களின் அடைப்பின் சதவீதம் குறைவாக இருந்தால் அஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை செய்வார்கள் மூன்று ரத்த குழாழ்களிலும் அடைப்பு இருந்தால் இதயம்  பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் . புதுமையைக் கொண்டு வரும் மருத்துவர்களின் முயற்சியால் சில அறிய புதிய சிகிச்சை முறைகள் இதய நோய்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது இ .இ. சிபி சிகிச்சை,இருதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள பயம் கொண்டவர்கள் மற்றும் ஏற்கனவே பைபாஸ் சிகிச்சை மற்றும் வளைப் பொருத்தும் சிகிச்சை செய்துக் கொண்டு அதில் பலன் இல்லாதவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைச் செய்துக் கொள்ளும் அளவிற்கு போதிய உடல் பலம் இல்லாதவர்களுக்கும் ஏற்ற ஒரு சிகிச்சை தான் இந்த இ இ சி பி சிகிச்சை முறை .

மருத்துவர் k .சிவக்குமார் அவர்களின் கேள்வி ;

ஆகையால் எல்லோருக்கும் இந்த இ இ சி பி சிகிச்சை எந்த முறையில்   மேற்கொள்ளப்படுகிறது என்று நேயர்களுக்கு நிச்சயமாக ஒரு விழிப்புணர்வு இருக்கும்.

இந்த சிகிச்சையில் உங்களின் கருத்து என்ன.

மருத்துவர் சு.ராமசாமி அவர்களின் பதில் ;

அதாவது  இந்த heal your heart eecp சிகிச்சை முறை என்பது ஒரு [non invasive] சிகிச்சையாகும் அதாவது இந்த சிகிச்சை முறை அறுவைச் சிகிச்சை இல்லாமல் இதயத்திற்க்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் முறையாகும் . இந்த சிகிச்சை முறை எப்படி செயல்படுகிறது என்றால் இந்த சிகிச்சை முறையின் பிரத்தியேக மேஜையில் நோயாளிகள் படுக்கவைக்கப்பட்டிருப்பார்கள் .

அதாவது நீங்க பொதுவாக ஒரு மருத்துவர் அலுவலகம் சென்றால் அங்கு மருத்துவர் நோயாளி கையில் ரத்த அழுத்த காற்று பை கட்டுவதை நாம் எல்லோரும் பார்த்து இருப்போம் அதேபோல் தான் காலிலும் ,தொடையிலும் ,இடுப்பிலும் இந்த காற்று பைகள் கட்டப்பட்டிருக்கும் மற்றும் நோயாளியின் மார்பக பகுதியில் இசிஜி லீட்ஸ் பொருத்தப்பட்டிருக்கும் இது இசிஜி மெசின் ல்  ஒளிப்பதிவாகும் மேலும் நோயாளியின் இதயத்திற்க்கு ரத்த ஓட்டம் எந்த அளவிற்க்கு பாய்கிறது அதேபோல் நோயாளியின் உடலில் ரத்தத்தில் oxygen அளவு எந்த அளவிற்க்கு இருக்கின்றது என்று அறிய கை விரலில் probe பொருத்தப்பட்டிருக்கும் அதாவது இவை எல்லாம் வெளிப்புறம் பொருத்தப்பட்டிருக்கும் . காற்றுப்பையும்,probe ,மற்றும் இசிஜி இவை எல்லாம் external வெளிப்புறம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிகிச்சை அறுவை சிகிச்சை இல்லாத ஒரு சிகிச்சை என்று கூறுகிறோம் அதாவது இந்த சிகிச்சையின் செயல்முறை என்பது தினமும் ஒரு முறை ஒரு மணி நேரம் வீதம் 35   நாட்கள் தொடார்ச்சியாக எடுத்துக்கொள்வார்கள் அதாவது ஒரு வாரத்திற்க்கு 6 நாட்கள் வீதம் 6 வாரங்கள் தொடர்ச்சியாக இதை நாங்கள் செய்வோம் இந்த சிகிச்சையின் போது நாங்கள் என்ன செய்வோம் என்றால் கால்களில் உள்ள ரத்த ஓட்டத்தை இருதயத்திற்க்கு அதிகப்படுத்துகிறோம் அதாவது நோயாளியின் மார்பகத்தில் இருக்கும் இசிஜி யை கணக்கிட்டு ஒரு [ micro second period ]உங்கள் இருதயத்தில் இருக்கின்ற coronary vessels ரத்த நாளங்கள் விரிவடையும் போது அதாவது இருதயம் விரிவடையும் போது அங்கு ரத்த ஓட்டத்தை இருதயத்திற்க்கு அதிகப்படுத்துகிறோம் அப்போது அங்கு என்ன நடக்கும் என்று கவனித்தால் ரத்த ஓட்டமானது நேராகவே கரோனரி ரத்த நாளங்களின் வழியாக ஒன்றிலிருந்து இரண்டு மடங்காக ரத்தை செலுத்த முடியும் .அவ்வாறு இருதயத்திற்க்கு போகும் போது இயர்கையாகவே ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் 35 மணி  நேரம் 35 நாட்கள் கொடுக்கும் போது அதிகமான velocity பரப்பளவில் அழுத்தம் கொடுப்பதினால் அந்த இடத்தில் சிறு சிறு ரத்த நாளங்கள் உருவாகின்றது உங்களுடைய முக்கியமான பகுதியில் main vessels அடைப்பு ஏற்பட்டிருந்தால் இந்த அழுத்தம் அதிகமாவதால் ரத்த ஓட்டமும் அதிகமாகும் காரணத்தினால் அந்த அடைப்பை தாண்டி ரத்த ஓட்டம் போகும் . இதனால் தான் நாம் இந்த இ இ சி பி சிகிச்சை முறையை natural bypass இயற்க்கை அறுவை சிகிச்சை முறை என்று சொல்லுகிறோம். இந்த சிறு சிறு ரத்த நாளங்கள் உருவாகி ரத்த ஓட்டம் அதிகரிப்பதினால் அந்த அடைப்பையும் தாண்டி ரத்த ஓட்டம் பாய்கிறது மேலும் இருதயம் சுருங்கும் போது காற்றுப் பைகள் விரிவடைகிறது அப்பொழுது உங்கள் கால்களில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடையும் போது இதயமானது அந்த ரத்த நாளங்களில் அழுத்தம் கொடுக்கும் ஆகையால் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை[ oxygen requirment of heart ] னு சொல்லுவோம் இந்த oxygen requirment அளவும் குறைந்து விடும் இதயத்திற்கு ரத்த ஓட்டமும் அதிகமாகும் இவ்வாறு ரத்த ஓட்டம் அதிகமாகும் போது இந்த நோயாளி 10 நாட்களிலேயே இந்த சிகிச்சையின் புத்துணர்ச்சியை தெரிந்து கொள்வார்கள் . அந்த நோயாளியின் உடலில் நெஞ்சு வலி ,மூச்சு விடுவதில் சிரமம் ,சோர்வு தன்மை ,மற்றும் இதய படபடப்பு இவையெல்லாம் குறைய ஆரம்பித்துவிடும் இந்த சிகிச்சை 35 நாட்கள் செய்ய வேண்டும் என்பது ஒரு விதி முறையாகும் .

types of patient ;

இந்த சிகிச்சை அதே நேரங்களில் இரண்டு விதமான நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது ஒன்று angina நீங்கள் கூறியது போல் நிலையான நோயாளி. இருதய செயல்திறன் சீராக இருக்கும் அவர்கள் stable angina with normal heart function உள்ளவர்கள். இவர்களுக்கு சிகிச்சை முறையின் படி ஒரு 220 ல் இருந்து 240 வரை pressure அழுத்தம் கொடுப்போம். இந்த அழுத்தத்தை முதல் நாளில் இருந்து படிப்படியாக அதிகரித்து அவர்களுக்கு அழுத்தைதை கொடுப்போம் அந்த நோயாளிகளுக்கு oxygen saturation, இசிஜி(ECG) மற்றும் blood pressure ரத்த அழுத்தம் எப்படி இருக்கிறது என்பதை கண்காணித்து கொண்டே இருப்போம் . சில பேருக்கு irregular heart rate [ஒழுங்கற்ற இதய துடிப்பு ]இருந்தால் அவர்களுக்கு 1:2 நெறிமுறையின் படி அழுத்தம் வழங்கப்படுகிறது . இதில் இன்னொரு வகை heart failure நோயாளியின் இதய செயலியப்பு . இவர்கள் [very high risk ]ஏனென்றால் heart pumping  function ரொம்ப குறைவாக இருப்பதன் காரணமாக இவர்களுக்கு pressure ரத்த அழுத்தத்தை நெறிமுறையின் படி 240 ல் இருந்து 260 வரை உடனே அளிக்க வேண்டி இருக்கும். இவர்களுக்கு oxygen விழுக்காடு 96 சதவீதத்திற்க்கும் குறைவாக காணப்படும்.இந்த மாதிரி நோயாளிகளுக்கு oxygen தொடர்ச்சியாக கொடுக்கப்பட வேண்டி இருக்கும் மேலும் அலை வரிசை waveform அதாவது எவ்வளவு ரத்த ஓட்டமானது இருதயத்திற்க்கு அதிகமாகிறது என்பதை தொடர்ச்சியாக கண்காணித்து கொண்டே இருப்போம் அதாவது இந்த [ normal heart function ]சீரான இதய செயல் பாட்டிற்க்கும் ,[heart failure function ]இதய செயல் இழப்பிற்க்கும் இந்த சிகிச்சையின் நெறிமுறை முற்றிலும் மாறுபடுகிறது . அதாவது தினமும் அவர்களுக்கு ரத்த அழுத்தம் ,இதய துடிப்பு , உடல் எடை மற்றும் sphygmocor என்று ஒரு சாதனம் கொண்டு அவர்களுடனுய ரத்த நாளங்கள் ,துடிப்புத் தன்மை இவை அனைத்தையும் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் கண்காணித்து கொண்டே இருப்போம் . இதன் மூலம் இதயத்திற்கு எந்த அளவிற்க்கு அதிகப்படுத்துகிறது என்று கண்காணிக்கப் படுகிறது இந்த சிகிச்சையால் நோயாளிகளுக்கு எந்தஒரு பாதிப்பும் ஏற்படாது .உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதும் ஒருவகையான உடற்பயிற்சி தான் .இந்த ரத்த அழுத்தத்தின் மூலம் காலில் உள்ள vessels இரத்த  நாளங்களுக்கும் ,இருதயத்தில் உள்ள இரத்த நாளங்களுக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது .

மருத்துவர் சிவராம் அவர்களின் கேள்வி

பொதுவாக இதய நோய் உள்ள எல்லோருக்கும் இந்த eecp சிகிச்சை முறையை எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆர்வம்  இருக்கும் . ஆனால் [contra indication] அப்படி என்று ஒன்று இருக்கின்றது .சில நோயாளிகளுக்கு இந்த eecp எளிய முறையாக இருந்தாலும் கூட எடுக்க முடியாது என்ற நிலை இருக்கும். அதைப்பற்றி உங்க கருத்து என்ன

மருத்துவர் ராமசாமி பதில் ;

அதாவது ஒரு சிகிச்சை முறையுடைய வெற்றி என்பது நோயாளிகளின் தேர்வை பொறுத்து என்று சொல்லுவோம் .இந்த[ eecp treatment] இ இ சி பி  சிகிச்சை முறை பலதரப்பட்டவர்களுக்கு பயன்பட்டாலும் சில நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறையை ரொம்ப கவனமாக கொடுக்க வேண்டும். சில முன்னெச்சரிக்கை முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் . சில நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை கொடுக்கவே முடியாதுஅதாவது அந்த நோயாளியை நாம் முதலில் கண்டுபிடித்து , அவர்கள் தவறுதலாக இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளாதபடி நாம் கவனமாக பார்க்க வேண்டும் .

இப்பொழுது நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சில நோயாளியின் சாதாரண இரத்த அழுத்தம் -யை கவனமாக எடுத்து , அதை நாம் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் இப்பொழுது systolic blood pressure normal சீராக 120 ஆக இருக்க வேண்டும்  இதற்க்கு மாறாக அவர்களுக்கும் 180 ஆக இருந்தால் அவர்களுக்கு இந்த சிகிச்சை கொடுக்க முடியாது அனால் நாம் இவர்களுக்கு blood pressure இரத்த அழுத்தத்திற்க்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த பிறகு அவர்களுக்கு இந்த சிகிச்சையினை கொடுக்கலாம் . இரண்டாவதாக arrhythmia என்று சொல்லுவார்கள் அதாவது உங்க heart beat இதய துடிப்பு ரொம்ப சீரற்ற நிலையில் இருந்தால் அதற்க்கு சில மருந்து மாத்திரைகள் கொடுத்து இதயத் துடிப்பை சீரான நிலைக்கு கொண்டு வர முடியுமா என்று பார்க்க வேண்டும் இப்பொழுது அதிகமான [irregular heart beats ] சீரற்ற இதய துடிப்பு இருக்கும் பொழுது அவர்களுக்கு இந்த சிகிச்சையினை கொடுக்க முடியாது . ஏனென்றால் இந்த சிகிச்சை முறையில் முக்கியமானது இந்தஇசிஜி- யை பொறுத்து தான் இருக்கும் . அதாவது இந்த இசிஜி -யில் [abnormal heart rate ]சீரற்ற இதயத் துடிப்பு இருந்தால் arrhythmia என்று சொல்லுவோம் அவர்களுக்கு irregular சீரற்ற நிலையில் இருக்கும் பொழுது மெஷின் சரியாக இயக்க முடியாது .அதாவது இந்தமாதிரி நோயாளிகளுக்கு இந்த சிகிச்சையினை தவிர்க்க வேண்டியது மிகவும் நல்லது . அவர்களுக்கு இந்த eecp இ .இ .சி .பி சிகிச்சையினை செய்யலாம் அவ்வாறு செய்தாலும் அவர்களுக்கு பெரிதாக [benefit] நன்மை ஒன்றும் இருக்காது. [peripheral vascular disease] என்று சொல்லுவோம். இப்பொழுது எல்லா [cordiac patient] இருதய நோயாளிகளுக்கும் [coronay artery] அந்த இரத்த குழாழ்களில் அடைப்பு இருக்கும் பொழுது ,மற்றும் நம் உடலில் உள்ள எல்லா இரத்த நாளங்களிலும் அடைப்பு இருக்கலாம் கால்களிலும் இருக்கலாம் .ஏனென்றால் நீங்கள் heart patient இதய நோயாளி என்று சொல்லும் பொழுது அவர்களுக்கு நீரிழிவு இருக்கலாம், hypertension உயர் இரத்த அழுத்தம் இருக்கலாம். other risk factor இருக்கும் பொழுது காலில் உள்ள இரத்த குழாழ்களிலும் அடைப்பு இருக்கலாம் .அவர்களுக்கும் இந்த சிகிச்சையினை செய்யலாம். அதாவது [major useless ] பெரிய இரத்த நாளங்களில் 90 சதவீதம் அடைப்பு இருந்திருந்தால் நீங்கள் கால்களில் எந்த வித அழுத்தம் கொடுத்தாலும் அந்த இரத்த ஓட்டம் அந்த அடைப்பை தாண்டி போகாது . அதாவது அப்படி இருக்கும் பொழுது அவர்களுடைய கால்களில் உள்ள வலிகள் குறையுமே தவிர ,அவர்களின் இருதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியாது .

அதாவது அவர்களுக்கு eecp சிகிச்சையை கொடுக்கலாம் ,ஆனால் நோயாளிகள் இருதய நோய்க்காக வந்திருந்தால் அவர்களுக்கு அந்த அளவிற்கு பயன் இருக்காது . அதனால் இந்த மாதிரி இருக்கின்ற நோயாளிகளுக்கு சில முறைகள் தேவைப்படுகிறது. இதற்கு பிறகு சில நோயாளிகள் மாத்திரைகள் , அதாவது [anti coagulant ] என்று கூறுவோம் இந்த [aspirin tablet] சில கொடுப்பார்கள் இந்த மாத்திரை இரத்தம் கட்டியாகாமல் தடுக்கக் கூடிய மாத்திரைகள் இந்த மாத்திரையை எடுக்க கூடிய நோயாளிகளுக்கு eecp இ. இ. சி. பி சிகிச்சை முறைக்கு முன்பு அந்த மாத்திரையின் dosage அளவு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும் அவ்வாறு அவர்கள் dosage கட்டுப்பாடு இல்லாமல் சிகிச்சையினை கொடுத்தால் அவர்களுக்கு இரத்த நாளங்களில் ruptureசிதைவு ஆகும் போது கிளாட் [clot ] ஆகாது அதனால் நீங்கள் அழுத்தம் கொடுக்கும் பொழுது கை கால்களில் blood spots வரலாம் அதனால் அந்த மாதிரியான நோயாளிகளுக்கு சிகிச்சை கவனமாக கொடுக்க வேண்டும் பிறகு vascular disease இதனால் தான் எல்லா நோயாளிகளுக்கும் echo எடுக்கின்றோம். அதாவது valve [நாளத்தின்]நிலை condition இதை aortic  valve என்று கூறுவார்கள். இந்த aortic valve ல் severe leakage இருந்திருந்தால் eecp சிகிச்சை அவர்களுக்கு கொடுக்க கூடாது. இதை நாம் contraindication என்று சொல்லுவோம் . பிறகு aorta இந்த முக்கியமான இரத்த நாளங்கள் விரிவடைந்து இருந்திருந்தாலோ அல்லது இதற்க்கு முன்பு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து இருந்தாலோ அவர்களுக்கு இந்த eecp சிகிச்சை கொடுக்க கூடாது கடைசியாக கருவுற்ற பெண்கள் அவர்களுக்கு இந்த eecp சிகிச்சை கொடுக்க கூடாது,ஏனென்றால் அந்த கரு மாற்றத்தை ஏற்படுத்த  முடியும். என்பதை இதுவரை எந்த ஒரு ஆராய்ச்சி மையங்களிலும் செய்ய வில்லை அதனால் இந்த மாதிரியான நோயாளிகளுக்கு eecp இ .இ .சி. பி சிகிச்சை முறையை கவனமாக ,அதாவது precautions சொல்லுவோம் சில precautions எடுத்துக் கொள்ளலாம் ,இல்லையென்றால் அவர்களுக்கு அந்த அளவிற்கு நன்மைகள் இந்த eecp சிகிச்சையில் கொடுக்க முடியாது என்பதை நோயாளியிடம் முதலிலேயே நாம் தெரிவிக்க வேண்டும். நோயாளி திரு ரமேஷ் ;

dr ராமசாமி அவர்களின் கருத்து ,

இவர் பெயர் mr .ரமேஷ் ,வயது 35,கடந்த 55 வருடங்களாக diabetics [சர்க்கரை நோய் ],hypertension [உயர் இரத்த அழுத்தம் ]அதிகமாக இருந்தது.இப்பொழுது recent சமீபத்தில் 6 மாதத்திற்க்கு முன்பு இவர்களுக்கு chest pain

நெஞ்சு வலி என்றுச் சொல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆஞ்சியோகிராம் செய்து இருக்கிறார்கள் ஆன்ஜியோகிராம் செய்ததில் மூன்று இரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தார்கள் அதன் பிறகு echo எடுத்து பார்த்ததில் அவருடைய இதயத்தில் pumping function இதயம் துடிக்கும் செயல்பாடு 44 சதவீதம் ஆக குறைந்துள்ளது அதனால் heart attack ஏற்க்கனவே வந்து இருக்கின்றது உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.ஆனால் நோயாளிக்கு bypass surgery பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்துக் கொள்வதில் விருப்பம் இல்லை பின்னர் eecp சிகிச்சையைப் பார்த்து விட்டு eecp சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் என்று வந்திருந்தார்கள். அதனால் சிகிச்சை செய்வதற்கு முன்பு அவர்க்கு மூச்சு விடுவதில் சிரமம் அதிகமாக இருக்கும், ஏனென்றால் அந்த [heart pumping function ] இதயம் துடிக்கும் செயல்பாடு குறைவாக இருப்பதினாலும் ,இதயத்திற்கு இரத்த ஓட்டம் சரியாக போகாத காரணத்தினாலும், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் நெஞ்சு வலியும் இருந்தது . இப்பொழுது 35 நாட்கள் treatment முடித்துவிட்டு இப்ப மூச்சு விடுவதில்  சிரமமும் ,நெஞ்சு வலியும் இல்லாமல் இப்பொழுது அவர் நன்றாகவே இருக்கின்றார் . நோயாளி திரு ரமேஷ் அவர்கள் eecp சிகிச்சைப் பற்றி கூறும் கருத்து ;

என் பெயர் ரமேஷ் 55வயது ஆகின்றது .எனக்கு[ heart problem past 4 to 5 years ]இதய நோய் எனக்கு 4 ல் இருந்து 5 வருடங்களாக இருக்கின்றது. எனக்கு மூச்சு விட மிகவும் சிரமமாக இருக்கும் ஆனால் நெஞ்சு வலி எதுவும் இருக்காது. என்னால ரொம்ப தூரம் நடக்கவும் முடியாது weight எடையும் அதிகமாக தூக்க முடியாது. நான் குனிந்து நிமிர்ந்து எந்தஒரு வேலையும் செய்ய முடியாது,ஏனென்றால் எனக்கு ரொம்ப மூச்சு திணறும், மூச்சு விடவும் ரொம்ப கஷ்டமாக இருக்கும்.இந்த மாதிரி problem கஷ்டங்கள் அதிகமாவே இருக்கும். ஜனவரி  முதல் வாரத்தில் எனக்கு heart attack மாரடைப்பு வந்தது .லேசான மாரடைப்பு தான் என்னை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தார்கள். எனக்கு ஆன்ஜியோக்ராம் செய்து பார்த்ததில் [bypass surgery ]பைபாஸ் அறுவைச் சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்றுச் சொன்னார்கள். ஆனால் எனக்கு என்னவோ பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்வதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை என்ன என்று சொன்னால் அறுவைச் சிகிச்சைக்குப் பின் உள்ள பராமரிப்பு பராமரிப்பு மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று மிகவும் கவலைக் கொண்டேன்.அதனால் நான் பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கு எதிராக இருந்தேன் . ஆனால் அந்த 2,3 இதய கார்டியோலோஜிஸ்ட் இன் முக்கியத்துவம் அதை மீறி நான் eecp எடுக்க முயற்சி செய்துக் கொண்டு இருக்கும் போது [goverment hospital ] அரசு பொது மருத்துவமனையில் இந்த சிகிச்சை அளிக்கின்றார் என்று தெரிய வந்தது . [so choose the treatment ]அதனால் சிகிச்சை எடுத்துக் கொண்டேன் இப்பொழுது last week கடந்த வாரம் தான் சிகிச்சை முடிந்ததது. இப்பொழுது walking நடைப்பயிற்சி ஓரளவிற்கு 10 நிமிடங்கள் 5 நிமிடங்கள் இடைவெளி விட்டு 10 நிமிடங்கள் நடக்க முடிகின்றது. கொஞ்சம் [better ]சிறந்த முறையில் இருக்கின்றது [breathing problem] மூச்சு விட கஷ்டமாக இருந்தது, இவை எல்லாம் நிறைய எனக்குக் குறைந்து இருக்கின்றது. முன்னாடி இருந்ததை comparing சேர்த்து வைத்துப் பார்த்தல் இப்பொழுது சிறந்த முறையில் இருக்கின்றது 100சதவீதம் ஒரு விதமாக எனக்கு முன்னேற்றம் கிடைத்து இருக்கின்றது ,அப்பறம் இன்னும் போகப்போக தான் have to take care

doctor advice, medicine சாப்பிடுவதும் சரி food habit and walking[மருத்துவர் ஆலோசனைக்கும் அன்பே வேண்டும்,மருந்து சாப்பிடவும் சரி உணவு பழக்கம் மற்றும் நடைப்பயிற்சி ]செய்வதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.