Home | Transcriptions of Videos
Published on Jun 17, 2019
சில நோயாளிகளுக்கு ECG பரிசோதனை அறிக்கை (abnormal) என்று சொல்லுவோம். அவர்களுக்கு (atrial fibrillation) இருக்கிறது என்று அவர்களுடைய இதய மருத்துவர் சொல்லி இருக்கிறார்கள். இந்த atrial fibrillation என்பதால் என்ன ஆகும் என்றால் அவர்களுடைய இதய துடிப்பும் மிகவும் ஒழுங்கற்ற (irregular) நிலையில்லா இருக்கும். இப்பொழுது eecp சிகிச்சையில் உங்களுக்கு கொடுக்கக்கூடிய அழுத்தத்தை உங்களுடைய இதய துடிப்பிற்கு ஏற்ற மாதிரிதான் கொடுத்துக்கொண்டு இருப்போம். அதனால் ஒழுங்கற்ற (irregular) இதய துடிப்பு இருக்கும் போது அவர்களுக்கு (eecp) சிகிச்சை முறையை கொடுக்கலாம், இருப்பினும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் பயன் என்பது மற்ற நோயாளிகளுக்கு ஏற்படும் பயன் அளவிற்கு இருக்காது. அதனால் இந்த மாதிரியான (atrial fibrillation) இருக்கும் நோயாளிகளுக்கு முதலிலேயே இந்த சிகிச்சைனுடைய பலன் பற்றி சொல்லி விட வேண்டும். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை ஒரு 35 நாள் இல்லாமல் அதற்கு மேல் அதிகமான நாள்கள் இந்த (eecp) சிகிச்சையை தர கூடிய நிலைமை ஏற்படலாம். அதை அவர்கள் முதலிலேயே தெரிந்து புரிந்துகொள்ள வேண்டும். ஆகையால் இந்த சிகிச்சை முறையினால் பலன்கள் இருக்கும் ஆனால் (atrial fibrillation) இல்லாமல் இருக்கின்ற நோயாளியை விட பலன்கள் கொஞ்சம் குறைவாக தான் இருக்கும். அதனால் அவர்களுக்கு அதிகப்படியான நாள்கள் இந்த சிகிச்சையை கொடுக்க வேண்டியது இருக்கும்.