Home | Transcriptions of Videos
Published on Jun 17, 2019
நாம் இருதயத்துக்கு கொடுக்கக்கூடிய பல வித சிகிச்சை முறைகளில் அதாவது அறுவை சிகிச்சையாக இருந்தாலும் சரி, அஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையாக இருந்தாலும் சரி, மருந்து மாத்திரை கொடுக்கும் முறையாக இருந்தாலும் சரி அல்லது (eecp) சிகிச்சை முறையாக இருந்தாலும் சரி மேற்கண்ட எந்த சிகிச்சை முறையிலும் உங்களுடைய இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி உங்களுடைய (symptoms) அதாவது நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், நடைபயிற்சி மேற்கொள்வது இவை அனைத்தையும் முன்னேற்றம் (improve) பண்ண முடியும். மேலும் இந்த சிகிச்சை முறையின் மூலம் உங்களுடைய heart attack ஏற்படுவதற்கான ஆபத்தை (risk) குறைக்க முடியும். ஆனால் சிகிச்சை முடித்த பிறகு உங்களுக்கு இனிமேல் (heart attack) வராது என்று யாருமே உத்திரவாதம் கொடுக்க முடியாது. அதற்க்கு காரணம் என்னவென்றால் இந்த (heart attack) என்பது இந்த சிகிச்சை முறையை மட்டுமே கொண்டு பொருந்துவது இல்லை. மேலும் (risk factor) என்று சொல்ல கூடிய உடல் பருமன், சர்க்கரை நோய், கொழுப்பு சத்து, ரத்த அழுத்தம், தினசரி குறைந்தது 45 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் இவை எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்தான் உங்களுடைய (heart attack) இதய தாக்குதலினுடைய ஆபத்து (constant) ஆக குறைக்க முடியும். ஆனால் இதை எதையுமே செய்யாமல் நாங்கள் ஒரு (eecp) சிகிச்சையோ, அறுவை சிகிச்சையோ, அஞ்சியோபிளாஷ்டியோ செய்து கொள்வதினால் உங்களுடைய (heart attack) வராமல் தடுக்க முடியுமா என்றால் திட்டவட்டமாக தடுக்க முடியாது, அதற்கான உத்திரவாதத்தை எந்த ஒரு மருத்துவரும் நோயாளிக்கு கொடுக்க முடியாது.