Home | Transcriptions of Videos
Published on Jul 09, 2019
இருதய செயல் இழப்பு (heart failure), இந்த வகை இருதய நோயாளிகளுக்கு (eecp) சிகிச்சை முறை ஒரு சிறந்த சிகிச்சை முறையாகும். இந்த மாதிரியான நோயாளிகளுக்கு என்ன ஆகும் என்றால் மூச்சு விடுவதில் சிரமம் அதிகமாக இருக்கும். அவர்களுடைய இதயத்தினுடைய செயல் திறன் மிகவும் குறைவாக இருப்பதினால் அவர்களுடைய வழக்கமான செயல்களான சாதாரணமாக நடைபயிற்சி மேற்கொள்வது, மாடிப்படி ஏறுவது, எடை தூக்குவது இந்த மாதிரி சின்ன சின்ன வேலைகள் கூட அவர்களுக்கு மிகவும் கடினமாக தெரியும். மேலும் இரவில் படுக்க முடியாது, முயன்று படுத்தால் என்ன ஆகும் என்றால் உடலில் உள்ள நீர் நுரையீரலுக்கு போவதனால் இருமல் ஏற்படும், மேலும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இந்த மாதிரி (symptoms) இருப்பவர்களை இருதய செயல் இழப்பு (heart failure) என்று கூறுவோம். இந்த மாதிரி நோயாளிகளுக்கு இந்த eecp சிகிச்சை முறையை 35 நாள்கள் கொடுப்பதன் மூலம் அந்த ரத்த ஓட்டம் என்பது இருதய தசைகளுக்கு அதிகப்படுத்தப்படுகிறது. அப்படி அதிகப்படுத்தும் போது அந்த இருதயத்தினுடைய (contraction power) அதாவது அதனுடைய (pumping function) என்பது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைய ஆரம்பிக்கும். ஆகையால் இந்த சிகிச்சை முறையை ஒரு 15 நாட்கள் கொடுக்கும் போதே மேற்கண்ட எல்லா அறிகுறிகளும் குறைய ஆரம்பித்துவிடும். மேலும் 35 நாட்கள் இந்த சிகிச்சை முறையை செய்யும் போது அவர்களுடைய வழக்கமான செயல்களை எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் செய்ய முடியும் மேலும் (echo cardiography) செய்யும் போது அந்த இதயத்தினுடைய (pumping function) ஒரு 10 to 15% முன்னேற்றம் அடையும். ஆகையால் இருதய செயல் இழப்பு (heart failure) நோயாளிகள் இந்த eecp சிகிச்சையை செய்வதன் மூலம் அவர்கள் அதிக பயனை பெறுவார்கள்.