Home | Transcriptions of Videos
Published on Jun 17, 2019
இருதய ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்ட உடனே முதலில் மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். சில பேருக்கு அந்த மருந்து மாத்திரைகளை உட்கொண்டும் நெஞ்சு வலி குணம் அடைவதில்லை. அந்த மாதிரி நோயாளிகளும் இந்த EECP சிகிச்சை முறையை எடுத்து கொள்ளலாம். இல்லை என்றால் சில சமயங்களில் அறுவை சிகிச்சையோ, ஆஞ்சியோபிளாஸ்ட்டியோ(angioplasty) செய்துகொள்கிறார்கள். அப்படி செய்து கொண்டும் 1 வருடங்களோ, 6 மாதங்களோ, 2 வருடம் கழித்தோ நெஞ்சு வலி வந்தது என்றால் அவர்களுக்கும் (EECP) சிகிச்சை முறையை செய்து கொள்ளலாம். சில பேர் ஆன்ஜியோகிராம்(anjiogram) செய்துகொண்ட பிறகு அவர்களுடைய ரத்த நாளங்களில் (Blood vessels) ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அடைப்பு இருக்கிறது, ஒரு அறுவை சிகிச்சையோ, ஆஞ்சியோபிளாஸ்ட்டியோ (angioplasty) செய்ய முடியாது என்று முடிவு எடுத்த பிறகும் கூட நாம் (EECP) சிகிச்சை முறையை எடுத்து கொள்ளலாம். இல்லை என்றால் (Co- morbid illness) என்று சொல்லுவோம், இப்பொழுது இருதய நோய் உள்ளவர்களுக்கு (kidney problem) இருக்கலாம், இல்லை என்றால் ஆஸ்துமா இருக்கலாம். அவர்களும் மயக்க மருந்து (anesthesia) கூட கொடுக்க முடியாது. அப்படி இருக்கும் போதும் (அந்த Co morbid illness இருக்கும் போதும்) அவர்களுக்கும் இந்த (eecp) சிகிச்சை முறையை எடுத்துக்கொள்ளலாம். கடைசியாக இருதய செயல் இழப்பு என்று சொல்லுவோம், அதாவது அவர்களுக்கு அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்த பிறகு கடைசியாக இருதயம் செயல் இழப்புக்கு போய்விடும். அவர்களும் இந்த (eecp) சிகிச்சை முறையை செய்துகொள்வதினால் பலன் அடையலாம்.