Home | Transcriptions of Videos

ஏன் இந்த eecp சிகிச்சை முறை ரெபிராக்டரி (Refractory Angina pectoris)AP உடைய நோயாளிகளுக்கு தகுந்த ஒரு சிகிச்சையாக விளங்குகிறது?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இப்பொழுது நிறைய நோயாளிகள் இந்த (eecp) சிகிச்சையை பற்றி வலைத்தளத்தில் பார்த்து இருக்கிறார்கள்  மேலும் சில இதய இயல் துறை கருத்தரங்கில் கூட இந்த (EECP) சிகிச்சை முறையை பற்றி கூறுகிறார்கள். ஆனால் இந்த சிகிச்சை முறையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வரும் போது நிறைய மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை முறை செய்வதற்கான வசதி இல்லை. எதனால் இந்த சிகிச்சை முறை அதிகபட்சமான (wide) மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை என்று நோயாளிகள் கேட்கிறார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் இந்த eecp சிகிச்சை முறை என்பது ஒரு புதிய சிகிச்சை முறை ஆகும். இப்பொழுது பல மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை முறை வராததற்கு காரணம் என்னவென்றால் இன்னும் இந்த சிகிச்சை முறை பிரபலம் அடையவில்லை. இப்பொழுதுதான் தமிழக அரசு மற்றும் பல காப்பீடு நிறுவனங்கள் முன் வந்து இந்த eecp சிகிச்சை முறையை அளிப்பதற்கான ஆவணம் கொடுத்து இருக்கிறார்கள். அதனால் இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் அந்த முழுமையான காப்பீட்டு பாதுகாப்பு (insurance coverage) வந்த பிறகு பல மருத்துவமனைகளில் இந்த eecp சிகிச்சை முறை அளிக்கப்படும்.