Home | Transcriptions of Videos

வாசோ மெடிடெக் EECP சிகிச்சைக்கு பிறகு என்னுடைய ECHO சதவிகிதம் மேம்பட்டிருக்குமா?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இருதயத்தினுடைய (pumping function) அதாவது (Ejection fraction) என்று கூறுவோம் அது சில இருதய நோயாளிகளுக்கு மிகவும் குறைவாக இருக்கும். சாதாரணமாக இருதயத்தினுடைய (pumping function) 50% சதவீதத்தில் இருந்து 70% சதவீதம் இருக்கும் என்று கூறலாம். ஆனால் சில நோயாளிகளுக்கு 35% சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும். அதை தான் (heart failure) என்று கூறுவோம் இந்த மாதிரியான நோயாளிகளுக்கு (EECP) சிகிச்சையை கொடுக்கும் போது அவர்களுடைய அறிகுறியான மூச்சு விடுவதில் சிரமம், படுக்க முடியாமல் சிரம படுவது, நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுவது இவை அனைத்தும் முன்னேற்றம் அடையும். ஆனால் நிறைய நோயாளிகள் எதிர்பார்ப்பது என்னவென்றால் (eecp) சிகிச்சைக்கு முன்பும் சிகிச்சைக்கு பின்பும் எடுக்கப்படும் (echo) பரிசோதனையில் அவர்களுடைய இதயத்தினுடைய (pumping function) அதாவது Ejection fraction முன்னேற்றம் அடையுமா? பொதுவாக 80% சதவீத நோயாளிகளுக்கு (Ejection fraction) என்பது (marginal) ஆக ஒரு 10 to 15% திட்டவட்டமாக முன்னேற்றம் அடையும். அதனால் இந்த (eecp) சிகிச்சையை செய்து கொண்டு ரத்த ஓட்டம் இருதய தசைகளுக்கு அதிகமாகும் போது அந்த தசைகளுடைய சுருங்கும் தன்மை (contraction) முன்னேற்றம் அடையும். அப்படி முன்னேற்றம் அடையும் போது இருதயத்தினுடைய (Punping function) அதாவது (Ejection fraction) என்பதும் திட்டவட்டமாக முன்னேற்றம் அடையும்.