Home | Transcriptions of Videos

100% அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு இந்த EECP சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளதா?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இப்பொழுது இரத்த குழாயில் அடைப்பு என்று சொல்லும்போது ஒரு (angiogram) செய்து கொள்ள சொல்கிறார்கள். அந்த பரிசோதனையின் அறிக்கையை பார்த்து மருத்துவர் 60%, 70% மற்றும் 80% அடைப்பு இருக்கிறது என்று நோயாளிகளுக்கு கூறுகிறார்கள். அதாவது எந்த மாதிரி அடைப்புக்கு (eecp) சிகிச்சையை செய்ய முடியும், எந்த மாதிரி அடைப்புக்கு (eecp) சிகிச்சையை செய்ய முடியாது என்று கேட்டால் எந்த வகையான அடைப்பு இருந்தாலும் அதாவது 60% சதவீதமோ, 70% சதவீதமோ அல்லது 100% சதவீதமோ அடைப்பு இருந்தாலும் இந்த eecp சிகிச்சையை செய்து கொள்ள முடியும். ஏன்னென்றால் ஒரு 90% அடைப்பு இருந்தாலும் கூட அந்த அடைப்பை தாண்டி இரத்த ஓட்டம் போக முடியும். அப்படி இருக்கும் போது ஒரு அஞ்சியோபிளா ஸ்டியோ, அறுவை சிகிச்சையோ அல்லது (eecp) சிகிச்சையோ இதில் எந்த முறையும் இந்த வகையான அடைப்புக்கு சிகிச்சை அளிக்க முடியும். ஆகையால் (eecp) சிகிச்சையை செய்து கொள்ள, இதய நோயாளிகளின் அடைப்பின் சதவீதத்தை முக்கியத்துவமாக எடுத்து கொள்வதில்லை. எந்த வித அடைப்புக்கும் இந்த (eecp) சிகிச்சை முறையை சிறந்த முறையாக செய்து கொள்ளலாம்.