Home | Transcriptions of Videos

வாசோ மெடிடெக் EECP சிகிச்சை முறையை எடுத்துக்கொண்ட பிறகும் ஏன் சில நோயாளிகள் முன்னேற்றம் அடையவில்லை?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

சில நேரங்களில் நோயாளிகளுக்கு கால்களில் இருக்கின்ற ரத்த குழாய்களில் பெரும்பாலான இடங்களில் அடைப்பு ஏற்படும் பொழுது, அதை (Peripheral vascular disease) என்று கூறுவோம். அதனால் கால்களில் இருக்கின்ற ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படும் பொழுது இந்த (eecp) சிகிச்சையில் அழுத்தம் கொடுக்கும் போது அந்த ரத்த ஓட்டத்தை கால்களில் இருந்தது இருதயத்திற்கு அதிக படுத்த முடியாது. மேலும் (arrhythmia) என்று கூறுவோம் அதாவது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (irregular heart beat) இருக்கும் நோயாளிகளுக்கு இந்த (eecp) சிகிச்சை முறையை ஒழுங்காக கொடுக்க முடியாது. மற்றும் நோயாளிகளின் முக்கியமான இதய வால்வுகளில் கசிவு (லீக் வால்வு) ஏற்படும் போது இந்த (eecp) சிகிச்சை முறை போதிய அளவுக்கு பலனை கொடுப்பதில்லை. இப்பொழுது என்னவென்றால் இந்த மாதிரியான நோயாளிகளை முதலிலேயே பார்த்திருந்தாலும் அவர்களுக்கு வேறு ஒரு சிகிச்சை முறை (option) இல்லை என்று சொல்லும்போது அப்பொழுது இந்த சிகிச்சை முறையை கொடுக்கலாம் ஆனால் அந்த நோயாளிக்கு முன்கூட்டியே இந்த சிகிச்சையினால் ஏற்படும் பலனை கூறிவிட வேண்டும். அதாவது அந்த நோயாளிகளுக்கு இந்த சிகிச்சையினால் பலன் இருக்கும் ஆனால் மற்ற நோயாளிகளை விட குறைவாக இருக்கும், இல்லை என்றால் அவர்களுக்கு அதிக சிகிச்சை முறை தேவைப்படலாம் என்பதை சொல்லிவிட வேண்டும். அதனால் இந்த சிகிச்சை முறையினுடைய பலன் என்பது  நோயாளிக்கு  நோயாளிகள் (patient to patient) மாறுபடலாம்.