Home | Transcriptions of Videos

35 நாட்களுக்குள் வாசோ மெடிடெக் EECP சிகிச்சை முறையை என்னால் எடுத்துக்கொள்ள முடியுமா?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இந்த வாசோ மெடிடெக் (EECP) சிகிச்சை முறையினை 35 நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாட்கள் வீதம், 35 நாட்கள் என்பது (standard protocol) என்று சொல்லுவோம் சில பேருக்கு இந்த 35 நாட்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி இருக்கும் பொழுது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் வீதம் ஒரு சிகிச்சைக்கும் இன்னொரு சிகிச்சைக்கும் குறைந்தது 3 மணி நேரம் இடைவேளை இருக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் இந்த சிகிச்சை முறையினை 18 நாட்களில் முடித்துக் கொள்ளமுடியும். சில நேரங்களில் இருதய நோய் இல்லாதவர்கள் அதாவது sugar, cholesterol, blood pressure உள்ள நோயாளிகள் ஒரு முன்னெச்சரிக்கைக்காக இந்த (EECP) சிகிச்சையினை (20 sessions)  மட்டும் எடுத்தால் போதும் அவர்கள் 35 நாட்கள் எடுக்க தேவை இல்லை. முன்னெச்சரிக்கையாக எடுக்கும் போது 20 நாட்கள் மட்டும் போதும்.