Home | Transcriptions of Videos
Published on Jul 09, 2019
(Vaso Meditech eecp) சிகிச்சையை எடுத்து கொள்வதன் மூலம் இருதயத்திற்கு இரத்த ஓட்டம் அதிகமாகிறது. இந்த இரத்த ஓட்டம் அதிகமாவதால் நோயாளிகளுடைய அறிகுறி அதாவது இந்த eecp சிகிச்சைக்கு முன்பு அவர்களால் சிறிது நேரம் கூட நடக்க முடியாது தற்பொழுது இந்த (eecp) சிகிச்சைக்கு பிறகு அவர்களால் நன்றாக நடக்க முடியும். அவர்களுடைய நெஞ்சு வலி நன்றாக குறையும் இல்லையென்றால் அவர்களுக்கு நெஞ்சு வலியே இல்லாமல் இருக்கும். மேலும் சின்ன சின்ன வேலைகள் செய்தால் கூட மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்திருக்கும் தற்பொழுது இந்த (eecp) சிகிச்சைக்கு பிறகு அவருக்கு இந்த மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. சில நோயாளிகளுக்கு இந்த (eecp) சிகிச்சைக்கு முன்பு இருதயத்தினுடைய (pumping function) மிகவும் குறைவாக இருக்கும். அவர்களுக்கு இந்த சிகிச்சை முறையை முடித்த பிறகு மறுபடியும் (echo) பரிசோதனை செய்யும் போது ஒரு (5%) சதவீதத்தில் இருந்து (10%) சதவீதம் வரை, சில நோயாளிகளுக்கு (15%) சதவீதத்தில் இருந்து (20%) சதவீதம் வரை இதயத்தினுடைய (pumping function) முன்னேற்றம் அடைந்திருக்கும். மேலும் இந்த சிகிச்சைக்கு முன்பு (T M T) பரிசோதனையில் ஒரு 7 அல்லது 8 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது அவர்களுடைய (ecg) பரிசோதனையில் மாற்றங்கள் இருக்கும். அதை தான் (T M T) positive என்று கூறுவோம். இப்பொழுது இந்த (eecp) சிகிச்சையை செய்து கொண்ட பிறகு அவர்களால் ஒரு (T M T) பரிசோதனையில் வெகு நேரம் (E c g) யில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியும். மேலும் இருதய நோயாளிகள் நெஞ்சு வலிக்காக சில மாத்திரைகளை எடுத்து கொள்வார்கள், அதை (nitrates) என்று சொல்லுவோம். இந்த நெஞ்சு வலி மாத்திரைகளை இந்த (eecp) சிகிச்சைக்கு பிறகு அந்த மாத்திரைகளின் அளவை குறைக்கலாம், இல்லை என்றால் அந்த மாத்திரைகளை (complete) ஆக நிறுத்தி விடலாம். ஆகையால் இதன் மூலம் இந்த (eecp) சிகிச்சையை செய்து கொள்வதினால் இருதயத்திற்கு ரத்த ஓட்டம் அதிகமாகிறது என்பது ஒரு சான்று ஆகும்.