Home | Transcriptions of Videos
Published on Jul 09, 2019
இந்த (vaso meditech – EECP) சிகிச்சை முறையை செய்து கொள்ளும் பல நோயாளிகளுக்கு முன்பே (bypass surgery) செய்துகொள்ள வேண்டும் என்று கூறி இருப்பார்கள். இருந்தாலும் அறுவை சிகிச்சையை செய்யாமல் இந்த (eecp) சிகிச்சையை செய்துகொள்கிறார்கள். இருந்தாலும் அவர்களுடைய Common கேள்வி என்னவென்றால் "doctor நாங்கள் இப்பொழுது eecp சிகிச்சையை செய்து கொண்டு இருக்கிறோம், இப்பொழுது அறுவை சிகிச்சை செய்வதினால் உண்டாகும் நன்மை இந்த சிகிச்சை முறையில் கிடைக்குமா அல்லது அதை விட குறைவாக தான் நன்மைகள் கிடைக்குமா என்பது ஒரு Common கேள்வி. இதற்க்கு என்ன பதில் என்றால் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் போது இரண்டு வகையான நோயாளிகள் இருக்கிறார்கள். ஒன்று மிக அவசரமாக அறுவை சிகிச்சை செய்வது அவர்களுக்கு (heart attack) ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக (angiogram) செய்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அந்த மாதிரியான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை என்பது (eecp) சிகிச்சையை விட சிறந்தது. ஆனால் 80% அடைப்பு இருக்கிற நோயாளிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சை (Selective bypass) என்று கூறுவார்கள் அதாவது அவர்கள் தொடர்ச்சியாக நடை பயிற்சி மேற்கொண்டு இருப்பார்கள் மேலும் ஒரு (health checkup) அல்லது சிறிதாக நெஞ்சு வலி ஏற்படும் போது ஒரு (angiogram) செய்து நிறைய இடங்களில் அடைப்பு இருக்கிறது என்றும் அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரைக்க படுகிறார்கள். இந்த மாதிரியான நோயாளிகளுக்கு ஏதற்காக அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்றால் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி அதன் மூலம் அவர்களுடைய நெஞ்சு வலியை குறைக்கவும், மூச்சு விடுவதில் சிரமத்தை குறைக்கவும், வெகு தூரம் நடைபயிற்சியை மேற்கொள்ளவும் முடியும் அதாவது (quality of life) மறுபடியும் கிடைக்கும். இந்த மாதிரியான நோயாளிகளுக்கு (eecp) சிகிச்சையை செய்யும் போது ஒரு அறுவை சிகிச்சை முறையில் எவ்வளவு நன்மைகள் ஏற்படுமோ அதே நன்மைகளை அவர்கள் surgery இல்லாமல் திட்டவட்டமாக EECP மூலம் பெற முடியும்.