Home | Transcriptions of Videos
Published on Jul 09, 2019
எல்லா இருதய நோயாளிகளும் ஒரு சிகிச்சை முறை என்று சொன்ன உடன் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் ஒரு மருந்து மாத்திரை உட்கொள்வது, ஒரு அறுவை சிகிச்சை முறை அல்லது (angioplasty) முறை இவற்றில் நோயாளிகளின் இரத்த குழாயில் உள்ள அடைப்பை நீக்கி விடுகிறார்கள் என்று நினைத்து கொள்கிறார்கள். அது ஒரு தவறான பதிவாகும். உதாரணமாக ஒரு அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளியின் இரத்த குழாயில் உள்ள அடைப்பை நீக்குவது இல்லை. அடைப்பை தாண்டி ஒரு ரத்த நாளத்தை பொறுத்துகிறார்கள். அதே மாதிரி (angioplasty) சிகிச்சை முறையிலும் அடைப்பை நீக்குவது இல்லை. அதற்கு பதிலாக அடைப்பை விலக்கி விட்டு மீண்டும் அந்த அடைப்பு மூடி விடாமல் வலை பொறுத்துகிறார்கள். அதே மாதிரி இந்த eecp சிகிச்சை முறையிலும் அந்த அடைப்பை நீக்குவது இல்லை. மேலும் இந்த சிகிச்சை முறையினால் அந்த அடைப்பை தாண்டி சிறு சிறு ரத்த நாளங்கள் உருவாகி அந்த இரத்த நாளங்கள் வழியாக அந்த இரத்த ஓட்டம் அடைப்பை தாண்டி செல்கிறது. ஆகையால் எந்த சிகிச்சை முறையிலும் அடைப்பை நீக்குவது இல்லை, ஆனால் அடைப்பை தாண்டி ரத்த ஓட்டம் செல்ல வழி வகை செய்யப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகள் குணமடைகிறார்கள். அந்த இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை நீக்குவதினால் குணமாவது இல்லை.