Home | Transcriptions of Videos
Published on Jul 09, 2019
இருதய நோயாளிகளுக்கு இருதயத்திற்கு இரத்தத்தை கொடுக்கும் (coronary artery) யில் அடைப்பு ஏற்படுகிறது. அப்படி அடைப்பு ஏற்படுவதினால் இரத்த ஓட்டம் இருதய தசைகளுக்கு சரியாக செல்வது இல்லை. அப்படி சரியாக செல்லவில்லை என்றால் கொஞ்சம் தூரம் நடந்தால் அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்படுவது, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது போன்ற பல தொந்தரவுகள் ஏற்படும். இந்த மாதிரியான நோயாளிகளுக்கு சிகிச்சை என்று சொன்னால் ஒன்று மருந்து மாத்திரைகள் கொடுப்பதினால் அவருடைய இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியும். ஆனால் சில நோயாளிகளுக்கு மருந்து மாத்திரையினால் மட்டுமே குணப்படுத்த முடியாது. அப்படி இருக்கும் போது அவர்களுக்கு ஒரு அறுவை சிகிச்சையோ அல்லது (angioplasty) சிகிச்சையோ செய்து கொள்கிறார்கள். இந்த (bypass, angioplasty) செய்வதன் மூலம் அந்த அடைப்பை தாண்டி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியும். இப்பொழுது (vaso Meditech – eecp) என்ற புதிய சிகிச்சையின் மூலம் ஒரு அஞ்சியோபிளாஸ்ட்டியோ, (bypass surgery யோ) இல்லாமலேயே இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை இந்த சிகிச்சையின் மூலம் அதிகப்படுத்த முடியும். அந்த இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதினால் அந்த நோயாளிக்கு மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, சோர்வு தன்மை இவை எல்லாமே குறைந்து தொடர்ச்சியாக அவர்களுடைய வேலைகளை செய்து கொள்ள முடியும்.