Home | Transcriptions of Videos

வாசோ மெடிடெக் EECP சிகிச்சை என்றால் என்ன?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

Vaso Meditech - EECP சிகிச்சை முறை என்பது இருதய நோயாளிகளுக்கான ஒரு புதிய சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சைக்கு இருதய நோயாளிகள் மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. மேலும் அறுவை சிகிச்சையும் கிடையாது. இந்த சிகிச்சை முறையின் மூலம் ரத்த ஓட்டத்தை இருதயத்திற்கு அதிகப்படுத்த முடியும். இப்பொழுது இருதயத்திற்கு சிகிச்சை முறை என்று சொன்னால் அவை மருந்து மாத்திரைகள் கொடுப்பது (Medical Management), அறுவை சிகிச்சை, மற்றும் (angioplasty) சிகிச்சை முறை என்று இருக்கின்றது. இப்பொழுது இந்த (Vaso Meditech – EECP) சிகிச்சை முறை என்பது ஒரு புதிய (option) ஆகும். இந்த சிகிச்சை முறையின் மூலம் ஒரு (bypass surgery) செய்யும் போது அல்லது (angioplasty) சிகிச்சை செய்யும் போது எவ்வாறு இருதய வலி குறைகிறதோ அதே அளவுக்கு அந்த இருதயத்தின் வலியையும், மூச்சு விடும் போது ஏற்படும் சிரமத்தையும் இந்த (eecp) சிகிச்சை முறையின் மூலம் குறைத்து கொண்டு நோயாளிகள் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ முடியும். ஒரு (surgery) முறையோ அல்லது (angioplasty) முறையோ எவ்வாறு ஒரு நோயாளிகளுக்கு உதவி செய்யுமோ அதே போல் இந்த (eecp) சிகிச்சை முறையின் மூலம் நோயாளிகள் அந்த பலனை அடைய முடியும்.