Home | Transcriptions of Videos
Published on Jun 17, 2019
இப்பொழுது சில இருதய நோயாளிகளுக்கு (angiogram) செய்த பிறகு நிறைய இடங்களில் அடைப்பு உள்ளது என்று அறிந்ததும் அவர்களுடைய இதய மருத்துவரை சந்திக்கும் போது பலதரப்பட்ட சிகிச்சை முறைகளின் விருப்பங்கள் பற்றி மருத்துவர் நோயாளிகளிடம் உரையாடலாம். சில நேரங்களில் மருந்து மாத்திரைகளையே உட்கொள்ளுங்கள் என்று மருத்துவர் கூறலாம். இந்த நிலையில் அறுவை சிகிச்சை மற்றும் அஞ்சியோபிளாஸ்ட்டி செய்தல் ஆபத்து அதிகம் என்று கூறுவார்கள். சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று கூறுவார்கள். சில நேரங்களில் உங்களுக்கு அறுவை சிகிச்சை வேண்டாம் அஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையையே போதுமானது என்று கூறுவார்கள். இப்படி இருக்கும் போது உங்களுடைய இதய மருத்துவர் பல நேரங்களில் இந்த eecp சிகிச்சை முறையை பற்றி உங்களிடம் பேசுவது இல்லை. அப்படி இருக்கும் போது இந்த (eecp) சிகிச்சை முறை ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை என்பதால் நோயாளிகள் உங்களுடைய இதய மருத்துவரிடம் இந்த (eecp) சிகிச்சை முறைக்கு நான் தகுதியானவரா, இந்த சிகிச்சையை எடுத்து கொள்வதன் மூலம் என் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியுமா என்பதை நீங்கள் இதய மருத்துவரிடம் உங்களுடைய விருப்பத்தை தெரிவித்தால் தான் அவர்களும் இதனுடைய பயன்கள் பற்றி பேசுவார்கள்.