Home | Transcriptions of Videos

Non-Surgical EECP: Makkal TV/Athi Naveena Sikichai/4th August 2018 - Part 1

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இதய நோய் என்றதுமே படித்தவர் முதல் பாமரர் வரை ஒரு இனம் புரியாத அச்சம் ஏற்படுகிறது. ஏன்னெனில் மனிதனின் மரணத்திற்கு மிக முக்கிய காரணம் இதய நோயே. இதய நோய் ஏற்பட மிக முக்கிய காரணமாக அமைவது உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், புகை பிடித்தல், மது பழக்கம், மன அழுத்தம், உடல் பயிற்சி இல்லாமை,உணவு பழக்கவழக்த்தில் மாற்றம் மேலும் பரம்பரை காரணகளாலும் இதய நோய் ஏற்படுகிறது. ஏற்படுகிறது. இதய தசைக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் 3 caronery ரத்த குழாய்களில் உள்ள அடைப்பின் அளவை பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சையை தீர்மானிப்பர்.  caronery ரத்த குழாய்களில் அடைப்பின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்வார்கள். 3 ரத்த குழாய்களிலும் அடைப்பு இருந்தால் இதயம் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும். புதுமையை கொண்டு வரும் மருத்துவர்களின் முயற்சியால் சில அறிய புதிய சிகிச்சை முறைகள் இதய நோயாளிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இ இ சி பி சிகிச்சை, இருதய நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள பயப்படுவர்களுக்கு அல்லது ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் stent அறுவை சிகிச்சை செய்துகொண்டது பலன் இல்லாதவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அளவிற்கு போதிய உடல் பலம் இல்லாதவர்களுக்கு ஏற்ற ஒரு சிகிச்சை தான் eecp.

eecp சிகிச்சை முறையில் 3 ஜோடி காற்று பைகள் பொருத்தப்படும். இந்த காற்று பைகள் இருதயம் சுருங்கி விரியும் போது அதே நேரத்தில் சுருங்கி வீரியும்படி இருக்கும். இதனால் கால் பகுதிகளில் உள்ள ரத்தம் வழக்கத்தை விட அதிக வேகத்திலும், அழுத்தத்தாலும் ரத்த நாளங்கள் வழியாக இதயத்திற்கு செல்லும். இதனால் செயல்படாமல் இருக்கும் சிறிய ரத்த நாளங்கள் எளிதாக திறந்து கொள்ளும். எனவே இதயத்திற்கு முன்பு இருந்ததை விட அதிகமான ரத்த நாளங்கள் ரத்தத்தை கொண்டுசெல்லும் வகையில் அமைகிறது. இப்படி ஒரு முறை திறந்து விட படும் ரத்த நாளங்கள் நிரந்தரமாக இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் குழாய்களாக மாறி ஏற்கனவே அடைபட்ட இதய தசைகளுக்கு தேவையான ரத்தத்தை அனுப்பும் நிரந்தர பாதை ஆகிவிடுகிறது. eecp சிகிச்சை பெற்ற நோயாளிகள் இதன் பின் நன்றாக உடற்பயிற்சி செய்ய முடியும். நீண்ட தூரம் நடக்க முடியும். மருந்து மாத்திரைகளை குறைத்து கொள்ள முடியும். இந்த சிகிச்சை கு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

இதய நோய் பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறும் உரையாடல்:

heart disease, heart attack இது ரெண்டுக்கும் தான் mostly வந்து cardiologist அ வந்து patient பார்க்க வராங்க. so ஒரு patient வந்து clinic வரும் போது usfull  ல chest pain, நெஞ்சு வலி இருக்கு மூச்சு வாங்குது இது cardica problem மா இருக்குமோ னு பயமா இருக்கு னு வராங்க. அவங்களுக்கு வந்திருக்கிற வலி வந்து நெஞ்சு வலி தானா என்பதை சில question மூலம் கண்டுபிடிச்சிரலாம். eaither வந்து அவங்க வேலை செய்யும் போது வருதா, இல்லைனா வந்து எப்பவுமே அந்த pain continues ஆ இருக்கா என்பதை பார்த்துட்டு அவங்களுக்கு வந்திருக்கிறது gastic pain  ஆ அல்லது chest pain ஆ என்பதை கண்டுபிடிக்க முடியும். அப்படி முடியலைன்னா என்ன பண்ணுவோம் ஒரு ecg எடுப்போம். ecg எடுக்கறதனால வந்து அந்த நெஞ்சு வலி வந்து cardiac pain ஆ என்பதை வந்து 100% சொல்ல முடியாது. அதனாலதான் mostly ஒரு ecg பண்ணி முடிச்ச பிறகு கூட ஒரு tmt பண்ணிக்கோங்க னு சொல்றோம். அந்த tmt ல என்ன பன்றோம் னா tread mill ல ஒரு patient  அ ஓட வைக்கிறோம். அப்படி ஓடும் போது அந்த ரத்த ஓட்டம் வந்து அவர் exasise கு ஏற்றார் போல அந்த ரத்த ஓட்டம் அதிகமாகனும். இப்ப அவரோட ரத்த குழாய் ல அடைப்பு இருந்துதுன்னா அந்த tread mill ல ஓடும் போது அந்த ரத்த ஓட்டம் அந்த exasise கு ஏற்றார் போல அதிகம் ஆகாது. ஏனா வந்து  ஒரு 70, 80% upstrcation இருந்ததுனா ரத்தம் போகாது. அப்ப வந்து அந்த tread mill நடக்கும்போது ecg ல சில time changes இருக்கலாம் அல்லது அந்த patient கே வந்து chest pain வரலாம்.

அதை தான் நம்ம வந்து tmt positive னு சொல்றோம். இப்ப echo cardiograffy ஏத்துக்காக பன்றோம் னா உங்க heart உடைய pumping function வந்து ஏதாவது affect ஆகி இருக்கா என்பதை பாக்கறதுக்கு. எதை எல்லாம் வைத்து ஒரு patient வந்து இதய நோய் இருக்கா இல்லையா என்பதை கண்டுபிடிச்சிரலாம். இப்ப once அந்த இதய நோய் இருக்கா இல்லையா என்பதை கண்டுபிடிச்ச பிறகு அந்த patient உடைய symptoms கு ஏற்றார் மாதிரி, எனக்கு நடக்க முடியல doctor, நெஞ்சு வலிக்குது அப்படி சொல்லும்போது சில மருந்து மாத்திரைகளை அந்த patient கு கொடுக்கிறோம். அந்த மருந்து மாத்திரைகள் அதுக்கு அப்பறம் colastral, sugar, regular exsasise, food control, stress releving இத மாதிரி பல steps அ சொல்லி கொடுத்து இதன் மூலம் வந்து அவங்களுடைய cardica disease அ கட்டுப்படுத்த பாக்கறோம். Mostly நிறைய patient வந்து இந்த sugar control, colastral control plus medicine இதுலயே அவங்களுடைய நெஞ்சு வலி குணம் ஆகிவிடும், அவங்களால regular ஆ walk பண்ண முடியும். அப்படி இருந்தாலும் சில மாத்திரைகளை அவங்க life long சாப்பிடணும். இதுல சில பேருக்கு வந்து இத்தன மருந்து மாத்திரைகள கொடுத்து, நாங்க sugar control பண்ணோம் doctor, colastrol control பண்ணோம் doctor, நீங்க சொல்றா மாதிரி regular ஆ walk பன்றோம் ரொம்ப stress ஆகிறது இல்ல இருபினும் எனக்கு மறுபடியும் மறுபடியும் chest pain வந்துகிட்டே இருக்கு னு சொல்லும்போது என்ன நினைபோம் னா ஒரு angio கிராம் பண்ணி பார்க்கலாம் அப்படி னு முடிவு பன்றோம். இப்ப தான் அந்த patient கு வந்து they should know என்ன management பண்ண போறாங்க னு அந்த patient கு முன்னாடியே தெரியணும். அப்ப தான் வந்து next என்ன treatment சொல்ல போறாங்களோ அத வந்து patient னால accept பண்ண முடியும். இப்ப angio gram னு ஒரு cardiology சொன்ன பிறகு இப்ப எதுக்காக angio gram செய்யறோம் னா, உங்க ரத்த குழாய் ல எந்த எந்த இடத்துல அடைப்பு இருக்குது என்பதை பார்ப்பதற்குத்தான் angio gram . இப்ப question என்ன னா ஒரு patient வந்து எதுக்கு doctor angio கிராம் செஞ்சி என்னோட ரத்த குழாய் ல எங்க எங்க அடைப்பு இருக்றத எதுக்காக பார்க்கணும்? அப்படி னு கேக்கலாம். இப்ப என்னனா இப்ப வந்து ஒரு patient வந்து angio gram கு ready ஆயிட்டாரு என்றாலே அந்த patient கு வந்து eaither ஒரு bypass surgery யோ, angio plasty யோ செய்ய முடியுமா முடியாதா eaither bypass அவருக்கு சிறந்ததா இல்லை என்றால் angio plasty சிறந்ததா என்று த பார்ப்பதற்குத்தான் நாம angio gram மே செய்யறோம். so அந்த மாதிரி நேரத்துல வந்து patient வந்து angio gram னு சொன்ன பிறகு they should ready for bypass surgery or angio plasty. இப்ப இங்கேயே வந்து சில patient வந்து என்ன நினைகிறார்கள் என்றால்,doctor எனக்கு எந்த அடைப்பு இருந்தாலும் எனக்கு stending proseeger வேண்டாம், bypass surgery வேண்டாம் னு முடிவு பண்ணிட்டாங்க னா அவங்கள இன்னும் medical management லேயே கொண்டு போகணும். இப்ப இந்த மாதிரி patient கு வந்து இதயத்துக்கு சரியாக ரத்த ஓட்டம் போக வில்லை. அதனால தான் அவருக்கு ecg ல தெரியிது, இல்லனா வந்த  tread mill ல pasitive இருக்கு, நெஞ்சு வலி வருது இல்லனா echo ல பிரச்சனை இருக்கு. இப்ப இந்த patient கு வந்து angio gram பண்ண முடியாது, பண்ண வேண்டாம் னு சொல்லிட்டாரு ஆனால் இன்னும் வலி இருக்கு னா, இந்த மாதிரி நேரத்துல இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதற்காக வந்திருக்கும் ஒரு புதிய சிகிச்சை முறை தான் இந்த eecp என்ற  சிகிச்சை முறை. it is call enhanced external counter pulsation.

Patient திரு. ரமேஷ் பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறும் கருத்து:

இவர் Patient ரமேஷ் 55 years, 10 வருஷமா அவருக்கு diabetes, Hypertension plus  cholesterol லும் அதிகமா இருந்தது. இப்ப resent ஆ வந்து 6 மாசத்துக்கு முன்னாடி வந்து severe chest pain னு சொல்லிட்டு hospital ல admit ஆகி angio gram பண்ணாங்க. angio gram பண்ணதுல 3 vessels ளையும் block இருப்பதை பார்த்தாங்க. அப்பறம் echo பண்ணி பார்த்ததுல அவருடைய இருதயத்தோடு pumping function வந்து 44% கொஞ்சம் குறைந்து இருந்தது. so heart attack கும் ஏற்கனவே வந்து இருந்தது. immedite ஆ bypass பண்ணனும் னு சொல்லி முடிவு பண்ணாங்க. ஆனா patient வந்து bypass surgery ல விருப்பம் இல்ல. பார்த்துவிட்டு அதுக்கப்பறம் eecp சிகிச்சையை பண்ணலாம் னு சொல்லிட்டு இங்க வந்தாங்க. so சிகிச்சை பண்ணுவதற்கு முன்னாடி வந்து அவருக்கு மூச்சு வாங்கறது அதிகமா இருக்கும். ஏன்னா அந்த heart pumbing function கம்மியா இருக்கறதுனாலும்,

இருதயத்திற்கு ரத்த ஓட்டம் சரியாக போகாததுனாலும் வந்து அந்த மூச்சு வாங்கறதும், நெஞ்சு வழியும் இருக்கும். அது அவருக்கு கொஞ்சம் அதிகமா இருந்தது. இப்ப 35 நாள் treatment முடிச்சிட்டு இப்ப மூச்சு வாங்கறது, நெஞ்சு வலி இல்லாம நல்லா இருக்காரு.

Patient திரு. ரமேஷ் அவர்கள் eecp சிகிச்சையை பற்றி கூறும் கருத்து:

என் பெயர் ரமேஷ், எனக்கு 55 years ஆகுது. எனக்கு heart problem for the past 4 to 5 years ஆ இருந்துகொண்டுதான் இருக்கு. breathing problem இருக்கும், மூச்சு விடுவது கஷ்டமா இருக்கும். அப்பறம் chest pain லாம் அவ்வளவா இருக்காது. ரொம்ப தூரம் நடக்க முடியாது, wait தூக்க முடியாது, குணிந்து நிமிர்ந்தால் மூச்சு விட கஷ்டமா இருக்கும் அத மாதிரி problem லாம் இருந்தது. January 1st week வந்து எனக்கு heart attack வந்தது. milde attack தான், hospitalliest பண்ணி angio gram பண்ணதுல Cabg தான் பண்ணனும் னு சொல்லிட்டாங்க. But எனக்கு என்னவோ bypass surgery பண்ணுவதில் அவ்வளவா இது (விருப்பம்) இல்ல. என்னனு சொன்னா post operative ல ரொம்ப கஷ்டமா இருக்கும் னு feel பண்ண. so i was againest bypass surgery. But inspiteofthat ஒரு  2,3 cardiologist அ பார்த்தேன், அவங்க கூட they sugested only for  cabg தான். அதையும் மீறி நான் eecp பண்ணனும் னு வெவ்வேறு இடதுல try பண்ணிக்கிட்டு இருந்த போது தான் government hospital ல கொடுக்கறாங்க னு தெரிந்தது. so i took the treatment. இப்ப தான் last week தான் 35 days treatment முடிந்தது. முன்னாடி வந்து என்னால கொஞ்சம் கூட நடக்க முடியாது. இப்ப எல்லாம் walking லாம் ஒரு 10 minites ஒரு 5 minites gap அப்பறம் ஒரு 10 minites நடக்க முடிகிறது, கொஞ்சம் better ஆ இருக்கு, breathing problem லாம் நிறைய குறைந்து இருக்கு. முன்னாடி compare பண்ணி பார்க்கும் போது இப்ப better ஆ இருக்கு. 100% ஒரு நல்ல ஒரு relif கிடைத்து இருக்கு. அப்பறம் இன்னும் போக போக தான் have to dear டு the doctorrs advice, medicine சாப்பிடுவதும் சரி food habites, and walking excerise பண்றதுனால வந்து ஒரு இது கிடைக்கும் னு நினைக்கிறன்.

eecp சிகிச்சை முறையை பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் உரையாடல்:

Enhanced External Counter Pulsation. இந்த சிகிச்சை முறைல என்ன பன்றோம் னா கால் ல வந்து 3 sets of cuff அத போட்டு கால்ல இருக்கற ரத்த ஓட்டத்த slow ஆ அதிகப்படுத்துறோம் இதயத்திற்கு. இத வந்து daily 1 மணி நேரம் வீதம் 35 நாள் எடுக்கும் போது ரத்த ஓட்டம் இதயத்திற்கு natural ஆகவே அதிகமாகுது. எப்படி அதிகமாகுதுன்னா உங்க ரத்த குழாய் ஐ சுற்றி நுண்ணீய ரத்த ஓட்டங்கள், cholesterol னு சொல்லுவோம், அந்த cholesterol வந்த நீங்க நடக்க நடக்க அந்த vessels எல்லாம் open ஆகும். ஆனா இந்த மாதிரியான cardiac patient கு என்ன பிரச்னை னா, doctor நான் மருந்து சாப்பிடுகிறேன் என்னால வந்து 5, 10 நிமிடம் கூட நடக்க முடியல, நடந்தா pain வந்துருது அதனால என்னால நடக்கவே முடியாது னு சொல்ராங்க. இப்படி பட்ட patient இந்த eecp சிகிச்சை செய்யும்போது என்ன ஆகுது னா ரத்த ஓட்டம் வந்து இதயத்திற்கு எல்லா இடத்துக்கும் அதிகமாகுது. இந்த சின்ன சின்ன ரத்த நாளங்கள் சொன்னேன்ல அந்த ரத்த நாளங்கள் லாம் கொஞ்சம் கொஞ்சம் மா விரிவடைகிறது. அது மட்டுமல்லாமல் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் போது புது புது vessels உம் அடைப்பை சுற்றி form ஆகுது. இத தான் natural bypass னு சொல்றோம். இதுக்காக eecp பண்ணத்தான் இதல்லாம் வருமா னு கேட்ட, தேவையில்லை. நிறைய பேறுக்கு வந்து இது natural ஆ வே form ஆயிடுது. அதனால தான் வந்து ஒரு general check up கு போகும்போது, doctor நான் general check up கு போனேன், ct angio பண்ண அதுல 4 block இருக்கு ஆனா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நெஞ்சு வலி இல்ல னா, block வந்து அவருக்கு 15 வருஷமா இருந்திருக்கலாம், இருந்தாலும் natural ஆகவே regular walking, execasise பன்றதுனால அந்த natural ஆகவே cholesterols form ஆகியிருக்கும். இந்த cholesterols நிறைய பேருக்கு form ஆகறது கிடையாது. அதனாலதான் அவங்களுக்கு நெஞ்சு வலி வருது. இப்ப இந்த eecp பண்ணும்போது அந்த cholesterols அதிகமாகறதன் மூலம் அந்த patient ஓட நெஞ்சு வலி கம்மி ஆயிடுது, medicine நும் eecp இன் மூலமே வந்து அவங்களுடைய எல்லா symptoms யும்  control பண்ணிடலாம்.

இப்ப அடுத்த வகையான patient அ பார்ப்போம். இவங்க angio கிராம் செய்ஞ்சுகிறாங்க. செய்த பிறகு  anjio plasty யோ, bypass ஓ ஏதாவது தேர்ந்தெடுத்து அந்த processer பண்ணிக்கிறாங்க.

ஒரு stent போடறமோ, bypass surgery போடறமோ இதுவும் வந்து permanent ஆனா solution கிடையாது. reasion என்னனா உங்க ரத்த குழாய் உடைய அடைப்ப ஒரு graft போட்டு bypass பன்றாங்க. அது தான் bypass surgery. இல்லனா ஒரு stent வச்சு open பன்றாங்க. ஏன் வந்து இத முழுமையான quear இல்லனு சொல்ல்கிறோம் னா இப்ப உங்களுக்கு செய்த proceger வந்து இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதற்கு மட்டும் தான் செய்கிறோம். உங்களுடைய நோய் என்னனா உங்க ரத்த குழாய் யில் அடைப்பு ஏற்பட்டதுதான் உங்க நோய். அந்த நோய் ய  வந்து bypass ஓ,angio plasty ஓ குணப்படுத்துவது இல்லை. உங்க tentansi to form upsticksion னு சொல்லுவோம். so என்ன பன்றது ஒரு bypass, angio plasty செய்து கொண்டாலும், இப்ப செய்துகொண்ட vessels இருந்து மற்ற ஒரு vessels ல மறுபடியும்  அடைப்பு ஏற்படலாம். அப்ப மறுபடியும் நெஞ்சு வலி வரும், அப்ப மறுபடியும் bypass, anjio plasty செய்யவேண்டும்படியாக இருந்தால் செஞ்சிதான் ஆகணும். அப்படி இல்லனா போட்ட stent ஓ graft ஓ நாளடைவில் அது close ஆவதற்கு chance அதிகம். எந்த graft ம் life long னு சொல்ல முடியாது. சில சமையம் நாம பாத்திருக்கோம் நிறைய patient லாம் நம்ம பாத்திருக்கோம் 3 மாசத்துக்கு அப்பறம் வந்து surgery ல போட்ட graft close ஆயிடுச்சி னு வராங்க, சில பேரு 5 வருஷத்துக்கு அப்பறம் வராங்க, சில பேரு 10வருஷத்துக்கு அப்பறம் வராங்க. useful வந்து இந்த graft கும் life இருக்கு. it is not a life long quar. so அப்படி இருக்கும் பொழுது ஒரு bypass ஓ angio plasty யோ செய்து கொண்டாலும் மறுபடியும் நெஞ்சு வலி வரும் பொழுது அவங்களுக்கு வந்து வேற வழி யே கிடையாது. மறுபடியும் நெஞ்சு வலி வரும் பொழுது மறுபடியும் surgery, மறுபடியும் angio plasty னு போவதற்கு பதிலா அந்த நேரத்திலையும் உங்க surgen ஓ, cardiologist ஓ பார்த்துட்டு இனிமே surgery பண்றத விட eecp பண்ணாலே ரத்த ஓட்டம் அதிகமாகும் னு சொல்லி சொல்ல முடியும். so இந்த eecp முறை வந்து சில பேருக்கு angio gram செய்யறதுக்கு முன்னாடியே செய்யறோம், சில பேருக்கு bypass, angio plasty பண்ணி முடிச்ச பிறகும் அவங்களுக்கு symptoms வரும் போது eecp சிகிச்சை பன்றோம்.

இப்ப இனொரு group பார்ப்போம். இவங்க என்ன சொல்ராங்க, angio gram பண்ணிக்கறாங்க vessels block இருக்காங்கறதா கண்டுபிடிச்சிறாங்க இருந்தாலும் சில பேருக்கு வந்து இந்தியா ல வந்து very coman ஏன இங்க diabaties அதிகமா இருப்பதனாலும், நம்மளோட coranary arties அதாவது ரத்த நாளங்கள், இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை கொடுக்கக்கூடிய ரத்த நாளங்களை தான் coranary arties னு சொல்லுவோம். இந்த coranary arties வந்து சின்னதா இருக்கு அப்பறம் வந்து நோய் வரும் போது defused ஆ, full vessels leanth ளையும் வந்து leasience இருக்கு இப்படி இருக்கும் போது வந்து ஒரு surgen னால ஒரு graft ஏ போட முடியாது. stending னு போனாலும் அது defused இருக்கறதுனால வந்து அந்த எடத்துல stent உம் போட முடியாது. so இவங்க என்ன பண்ண முடியும், surgery யோ angio plasty யோ செய்து கொள்ள ready தான் இருகாங்க ஆனா surgery யோ angio plasty யோ எதுவும் செய்ய முடியாது. காரணம் அவங்களோட coranary anatamy அந்த ரத்த நாளங்கள் அந்த மாதிரி இருக்கு. அப்படி இருக்கும் போதும் அவங்களுக்கு best treatment சொன்ன இந்த eecp சிகிச்சை முறை தான். இந்த மாதிரி patient உம் நிறைய பேர் வந்து இந்த eecp சிகிச்சை முறை ய எடுக்கறாங்க. 

இத எல்லாம் விட்டிட்டு அடுத்தது ஒரு group இருகாங்க. இவங்களுக்கு என்னனா patient கு heart attack வந்திடுது அதாவது முதல நெஞ்சு வலி என்பது வந்து ஒரு heart attack ஆக மாறி அந்த heart attack வந்த பிறகு என்ன ஆகுதுன்னா immediat ஆ அவங்களுடைய heart உடைய pumping function, அதாவது heart attack enbathu என்னனா இதயத்தோட massels அந்த massels வந்து இறந்து விடுகிறது (dead). Once that  massels is dead it cannot be recovered. அதுக்கு அப்பறம் அத நம்ம ஒண்ணுமே செய்யமுடியாது. அதனால என்ன ஆகுதுன்னு அந்த heart ஓட pumping, pumping vanthu அந்த massels ஓட stenth அ பொறுத்து இருக்கு. அந்த massels வந்து stenth அ இழந்திருச்சினா அந்த heart ஆல regular ஆ pump பண்ண முடியாது. அப்படி pump பன்னலான அந்த total heart ஓட eafikasi குறைந்து விடும். இத தான் இருதய செயல் இழப்பு (Heart failer) னு சொல்றோம். அதாவது herat failer னா வந்து heart complete நின்றது கிடையாது. இந்த heart failear னா என்ன meaning னா heart அதோட regular pumping function ல இருந்து கொஞ்சம் கொறஞ்சிடுது னு அர்த்தம். சில பேருக்கு வந்து 65% இருந்து 40% ஆக இருக்கலாம். ஒரு 40% வந்த பிறகே அத heart failer னு சொல்றோம். .  இப்படி இருக்கும் போது இந்த இருதயத்தோட செயல் இழப்பு இருப்பவர்கள் வந்து எந்த proseeger பண்ணாலும் ஒரு bypass ஓ, angio plasty யோ, angio gram ஓ எது செய்துகொண்டாலும் அந்த risk வந்து normal லா உள்ள patient விட 2 to 3 மடங்கு அதிகம்.

so அப்படி இருக்கும்போது இவ்வளவு risk யும் எடுத்து ஒரு surgery யோ, angio plasty யோ பண்ண முடியாத நிலைமயிலையும் வந்து eecp என்ற இந்த சிகிச்சை முறை வந்து அவங்களுக்கு கைகொடுக்கும். இந்த மாதிரி patients பல பேரு eecp சிகிச்சை முறையை செய்துகொண்டு அந்த overall pumping function improvement உம் இருக்கும், அதுக்கப்புறம் அவீங்களோட quality of life, மூச்சு வாங்கறது இது எல்லாமே நல்ல improve ஆகிடும்.

Patient திரு. அனந்தகிருஷ்ணன் பற்றி மருத்துவர் S ராமசாமி அவரகள் கூறும் கருத்து:

இவர் Patient திரு. அனந்தகிருஷ்ணன் 60 years old. 2014 ல வந்து அவர்க்கு வந்து chest pain னு சொல்லிட்டு hospital ல admit ஆகி இருந்தாரு. அப்ப வந்து heart attack னு கண்டுபிடித்து immediate ஆ angio gram பண்ணாங்க. angio gram பண்ணதுல வந்து 2 vessels வந்து severe ஆ block இருக்கு னு சொல்லிட்டு angio plasty பண்ணலாம் னு முடிவு பண்ணாங்க. ஆனா angio plasty வந்து ஒரு vessels ல தான் பண்ண முடிந்தது. பிறகு வந்து மருந்து மாத்திரை லேயே இருந்தாலும் ஒரு  3 மாசத்துல வந்து அவருக்கு pain வர ஆரம்பித்து விட்டது. அப்பறம் 2016 ல வந்து ஓமந்தூரார் medical college கு வந்து பார்த்தாரு. பார்த்துவிட்டு eecp சிகிச்சையை வேண்டும் என்றால் பண்ணி கொள்ளுங்கள் என்று பரிந்துரைத்தாங்க. அதுக்கப்பறம் அவர் 35 நாள் eecp சிகிச்சையை முடித்துவிட்டு இப்ப almost 1.5 வருஷம் ஆகிவிட்டது. இன்னமும் regular ஆ walk பன்றாரு. முன்ன மாதிரி அந்த மூச்சு வாங்கறது, நெஞ்சு வலி இப்ப கிடையாது, regular followup ல இருக்காரு. இப்ப இந்த மாதிரி patient வந்து every 3 months இல்லனா 6 months அவர follow பண்ணிட்டு அவருக்கு என்ன என்ன medication என்பதை நாங்க desite பண்ணி regular followup ல இருக்கனும். so regular followup ல இருப்பதனாலையும், மருந்து மாத்திரைகளை correct ஆ சாப்பிடுவதனாலையும் இந்த eecp சிகிச்சை முறையை முடிந்ததில் இருந்து அவருக்கு எந்த வித பிரிச்சனையும் இல்லாம நல்லா இருக்காரு.

Patient திரு. அனந்தகிருஷ்ணன் அவர்கள் eecp சிகிச்சை முறையை பற்றி கூறும் கருத்து:

R. அனந்தகிருஷ்ணன், பத்மாவதி நகர், கிழக்கு தாம்பரம் இப்ப எனக்கு வயசு வந்த 64 இப்ப வந்து நடக்குது. எனக்கு angio plasty பெங்களூர் ல பண்ணாங்க. அதுல 2 block, ஒரு block அ clear பண்ணிட்டாங்க angio plasty யில் ஒரு block அப்படியே இருக்கு. 2015 ல வலி தெரிந்தது, ராஜிவ் காந்தி hospital ல காண்பித்தோம். திரும்ப 2016 ல வலி தெரிந்தது ஓமந்தூரார் மருத்துவமனையில் நானாகவே வந்து காண்பித்தேன். 2017 ல 35 நாள் eecp treatment முடிந்தது. டாக்டர் ராமசாமி அவர்களை பார்த்த போது அவர் என்ன சொன்னார்னா operation எல்லாம் வேண்டியது இல்லை, bypass surgery தேவையில்ல அதனால வந்து நீங்க eecp சிகிச்சையை எடுத்துக்கோங்க னு சொன்னாரு. eecp ல demo 1/2 hour காண்பித்தாங்க. அந்த 1/2 hour ல எந்த வித பயமும் இல்ல. வீட்டுக்கு போயி விட்டேன். அதுக்கப்பறம் மறு நாள் ல இருந்து 35 நாள் நானே கிழக்கு தாம்பரம் யில் இருந்து தனியா வந்து 1 hour treatment எடுத்துக்கிட்டு போவேன் அந்த 1 hour treatment ல எந்த பயமும் இல்ல. உடம்பு நல்லா இருக்கு. 35 நாள் treatment முடிச்சி இப்ப 3 மாச followup காக check up காக  வந்து இருக்கிறேன். check up ளையும் எந்த தொந்தரவும் இல்ல normal இருக்கேன் னு சொன்னாங்க. இது bypass surgery பண்ண வேண்டியது இல்ல அத விட நல்ல treatment இது னு சொன்னதுனால நான் இந்த eecp treatment அ எடுத்துக்கொண்டேன். இந்த treatment நல்லா தேன் இருக்கு. எங்க போனாலும் தனியா தான் போவேன், தனியா தான் வருவேன் இந்த eecp எடுத்து 1.5 வருஷம் ஆகிடுச்சு. இந்த 1.5 வருசத்துல எந்த வழியும் இல்ல. doctor க என்ன instruction கொடுத்து இருக்காங்கன்னா, நீங்க அதிகமா stain எடுக்காதிங்க, உங்களுக்கு அதிகமா stain எடுக்க கூடாது, heart beet கொஞ்சம் கம்மியா இருக்கு மத்த படி எந்த தொந்தரவும் இல்ல நீங்க வந்து normal இருந்தீங்கனா உடம்பு  நல்லா இருக்கும், ஆரோக்கியமா இருக்கும் எவ்வளவு காலம் நாலும் இருக்கலாம் நீங்க, அப்படி னு சொன்னாங்க. salt கம்மி பண்ணி கொள்ளணும். என்றும் 2 கிலோ மீட்டர் காலைல walking போறேன். சுமார் 1/2 மணி நேரம் walking போகிறேன். இந்த 1/2 நேர walking போது எந்த தொந்தரவும் இல்ல. மூச்சு வாங்கற பிரச்சனை இல்லை. இன்று கூட காலையில் walking போய் விட்டு தான் கிழக்கு தாம்பரத்தில் இருந்து வந்து இருக்கிறேன்.

தனியாத்தான் வந்து இருக்கிறேன். heart வலி எதுவும் இல்லை. tablets ஐ continues ஆ சாப்பிடுகிறேன். அதனால எந்த தொந்தரவும் இல்ல. நல்லாவே இருக்கேன். 

Patient திரு. கங்காதரன் அவர்கள் பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கருத்து:

இவர் பெயர் திரு. கங்காதரன் 59 years old. ஒரு 1.5 வருசத்துக்கு முன்னால severe ஆ chest pain வந்ததுனால angio gram பண்ணாங்க. angio gram பண்ணி பார்த்துட்டு முதல் ல stent போடலாமா னு try பண்ணிட்டு முடியல அவரு bypass surgery தான் பண்ணனும் னு சொன்னாங்க. ஆனால் patient கு bypass surgery பண்றதுல விருப்பம் இல்ல. அதனால சரி மருந்து மாத்திரை லேயே பண்ணலாம் னு சொல்லிட்டு மருந்து மாதிரி கொடுத்தாங்க. அவருக்கு மருந்து மாத்திரை கொடுத்ததும் pain consistanta வந்ததுனால இந்த eecp சிகிச்சையே பண்ணலாம் னு முடிவு பண்ணி ஒரு 35 நாள் eecp சிகிச்சை ய முடிச்சிட்டாரு. இந்த சிகிச்சையை முடிச்சு almost 1 year ஆகுது. இந்த 1 year ல வந்து அவர் regular ஆ walking பண்ணிக்கிட்டு இருக்காரு. இப்ப  எல்லா மாத்திரைகளையும் correct ஆ  சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். sugar, presser எல்லாமே control ல இருக்கு. இப்ப இவருக்கு வந்து every 3 months வந்து followup பண்ணிகிட்டே இருப்போம். so இவர் regular ஆ walk பண்றதுனால சில மாத்திரைகளை கம்மி பண்ணிடலாம், இல்லனா சில மாத்திரைகளை நிறுத்திடலாம். 

Patient திரு. கங்காதரன் அவர்கள் eecp சிகிச்சையை பற்றி கூறும் கருத்து:

என் பெயர் கங்காதரன் எனக்கு நெஞ்சு வலி வந்தது. அதுக்காக hospital போய் treatment எடுத்துக்கிட்டேன். treatment எடுத்துல என்ன surgery பண்ணிக்க சொன்னாங்க, surgery பண்ணிக்கல அதுக்கு அடுத்தது மாத்திரையே சாப்பிட்டு வந்தேன். அதுக்கு அப்புறம் 35 நாள் eecp treatment கு போனேன் அதுல இருந்து உடம்பு நல்லா இருக்கு இப்ப எல்லா வேலையும் பார்க்கிறேன், வண்டி ஓட்டுகிறேன் 1/2 மணி நேரம் நடக்கிறேன் ஊருக்கு போகிறேன் தனி பட்ட முறையில் போறேன், வருகிறேன். மாத்திரைகளை மட்டும் continue பண்ணுகிறேன். surgery பண்ணிக்க சொன்னாங்க, பண்ணி கொள்ளாமல் இந்த eecp சிகிச்சையை செய்துகொண்டு நல்லா இருக்கிறேன்.