Home | Transcriptions of Videos
Published on Jun 17, 2019
ஒரு சிறந்த (eecp) மையம் என்றால் 1) அந்த மையத்தில் உள்ள (eecp) உபகரணங்கள் (equipment) அவை FDA அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும். 2) அந்த சிகிச்சையை கொடுக்க கூடிய செவிலியர் அதை பற்றி நன்கு படித்தவர்களாக (certified) இருக்க வேண்டும். ஏன்னென்றால் இந்த (eecp) சிகிச்சையை முறையாக கொடுப்பதற்கு அவர்கள் குறைந்தது 6 மாத காலம் முறையான பயிற்சி பெற்று இருக்க வேண்டும். அந்த பயிற்சி பெற்ற பிறகு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆகையால் அவர்கள் தான் அந்த (timing) என்று சொல்லுவோம் அதாவது எந்த நேரத்தில் கால்களில் அழுத்தம் கொடுக்க வேண்டும், எந்த நேரத்தில் கொடுக்க கூடாது என்பதை புரிந்துகொண்டு அதற்க்கு ஏற்றார் போல் நோயாளிகளுக்கு சிகிச்சையை கொடுக்க பயிற்சி கொடுக்க பட்டு இருக்கிறது. 3) எந்த மருத்துவர் அந்த சிகிச்சை முறையை கொடுக்கிறார்களோ அவர்களும் அதை பற்றி நன்கு தெரிந்தவர்களாக (certified) இருக்க வேண்டும். இது எல்லாமே இருக்கும் போது தான் அந்த சிகிச்சை முறை அந்த நோயாளியை முழுமையாக சென்று அடைகிறது. ஆகையால் அந்த மருத்துவர், செவிலியர் இவர்கள் எல்லோருமே (certified) மற்றும் அங்கீகாரம் பெற்று இருக்கும் இடத்தில் தான் நீங்கள் சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக்கொள்ளும் போது அந்த (eecp) சிகிச்சையினுடைய பலனை முழுமையாக எடுத்துக்கொள்ள முடியும்.