Home | Transcriptions of Videos

நெஞ்சு வலி மற்றும் இல்லாமல் வேறு இதய நோய்களுக்கும் இந்த EECP சிகிச்சை பலன் தருமா?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இப்பொழுது இந்த (eecp) சிகிச்சை முறை என்பது இருதய நோயாளிகளுக்கு அதாவது இருதய ரத்த குழாயில் அடைப்பு உள்ளவர்களுக்கும், இருதய செயல் இழப்பு (heart failure) உள்ளவர்களுக்கும் இந்த சிகிச்சை முறை எல்லாம் இடங்களிலும் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த சிகிச்சை முறை என்பது எந்த ஒரு பாதிப்பும் இல்லாததனால் இதயத்திற்கு மட்டும் இல்லாமல் உங்களுடைய மூளை(Brain), சிறுநீரகம்(Kidney) மேலும் உங்களுடைய லிவர்(Liver) போன்ற எல்லாம் உறுப்புகளுக்கும்  ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. அதனால் பல இடங்களில் இந்த (eecp) சிகிச்சை முறையை stroke வந்த நோயாளிகளுக்கும் பயன்படுத்துகிறார்கள் (utilized). அதே நேரத்தில் சிறுநீரகத்திற்கு ரத்த ஓட்டம் குறைவினால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு (renal failure)( C R F) என்று சொல்லுவோம் அந்த மாதிரி நோயாளிகளுக்கும் இந்த (eecp) சிகிச்சை முறையை சில இடத்தில் கொடுக்கிறார்கள். மேலும் இந்த சிகிச்சை முறை ஒரு (preventive) வாக அதாவது ஒரு நோயாளிக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு சத்து அதிகம்  மற்றும் குடுபத்தினருக்கும் இதய நோய் போன்றவை இருக்கிறது என்று சொல்லும் போது அவருக்கும் இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அந்த மாதிரி நோயாளிகளுக்கும் ஒரு (preventive) வாக இந்த (eecp) சிகிச்சை முறையை செய்துகொள்வதன் மூலம் இருதய நோய் வராமல் தடுக்க முடியும் அல்லது அதை தள்ளி வைக்க முடியும். அதனால் இதை (preventive) வாகவும் இந்த சிகிச்சை முறையை உபயோக படுத்தலாம். அதனால் (eecp) சிகிச்சை முறை என்பது இருதயத்திற்கு மட்டும் அல்லாமல் பல நோய்களுக்கும் இந்த சிகிச்சை முறையை பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.