Home | Transcriptions of Videos
Published on Jun 17, 2019
இப்பொழுது (EECP) சிகிச்சை முறை செய்துகொள்ளும்போது ஒரு 15 to 20 நாட்கள் சிகிச்சை முடிவில் நோயாளிகள் அதன் பலனை நிச்சியமாக உணருவார்கள். அதாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது, நெஞ்சு வலி குறைவது இவை எல்லாவற்றிலும் முன்னேற்றம் காண்பார்கள். இந்த சிகிச்சை முறையை முடித்த பிறகு நோயாளிகள் வழக்கமான உடற்பயிற்சி (regular exercise) செய்துகொண்டு இருந்தாலே இந்த 35 நாள்கள் (eecp) சிகிச்சையை எடுத்துக்கொண்டதன் பலன் நிறைய நோயாளிகளுக்கு 5 வருடம் முதல் 7 வருடம் வரை . அதே நேரத்தில் இருதய செயல் இழப்பு நோயாளிகளுக்கு இருதயத்தினுடைய (pumping function) மிகவும் குறைவாக இருக்கும். இவர்களுக்கு 1 முறை (eecp) சிகிச்சையை 35 நாள்கள் செய்து முடித்த பிறகு அந்த இருதயத்தினுடைய (pumping function marginal) ஆக முன்னேற்றம் அடையும், இந்த மாதிரியான நோயாளிகள் 1 வருடத்திற்கு 1 முறை அதாவது 35 நாள் சிகிச்சை முறையை எடுக்க தேவையில்லை ஒரு வருடத்திற்கு 20 நாள் சிகிச்சையை எடுத்துக்கொள்வதன் மூலம் அந்த சிகிச்சைனுடைய பலனை மிக அதிக நாள்கள் தக்க வைத்துக்கொள்ள முடியும்.