Home | Transcriptions of Videos
Published on Jun 17, 2019
எல்லா இருதய நோயாளிகளுக்கும் வழக்கமாக அவர்களுடைய கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கும். பொதுவாக உடம்பில் உள்ள கொழுப்பின் அளவு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் இவை அனைத்தையும் நாங்கள் இதயம் அபாயகரமான நிலையை அடைவதற்கான காரணி (cardiac risk factor) என்று கூறுவோம். அதனால் இருதய நோயாளிகளுக்கு எப்பொழுதுமே மேற்கண்ட மூன்று காரணிகளில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கும். இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் கொழுப்பின் அளவு, இந்த கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைப்பதற்கு எல்லாம் இதய நோயாளிகளும் சில மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள். (statin) என்று சொல்லுவோம், இந்த மாத்திரை உங்களுடைய கொழுப்பின் அளவை குறைப்பதற்காக கொடுக்க கூடியது. இப்பொழுது (statin) மாத்திரை இல்லாமல் உங்கள் கொழுப்பின் அளவை குறைப்பதற்கு (active) உடற்பயிற்சி செய்யும்போது அந்த கொழுப்பின் அளவும் குறைவாக இருக்கும், மேலும் உணவு கட்டுப்பாடு (food control) அதாவது உணவிலும் கொழுப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது (EECP) சிகிச்சை ஒரு (aggressive exercise) என்பதால் 1 மணி நேரம் இதை எடுத்துக்கொள்வது 8 கிலோமீட்டர் ஓடுவதற்கு சமமானது. அப்படி ஓடும் போது உங்களுடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, , கொழுப்பின் அளவு போன்றவை குறைகிறதோ அதே போல (EECP)சிகிச்சையை செய்துகொள்ளும் போதும் உங்களுடைய கொழுப்பின் அளவும் நன்றாக குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.