Home | Transcriptions of Videos

வாசோ மெடிடெக் EECP சிகிச்சையை எடுத்துக்கொண்டால் ஏதேனும் ஆபத்து உண்டா?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இருதய நோயாளிகளுக்கு இருதய சிகிச்சை கொடுக்கும் போது அதாவது அறுவை சிகிச்சை, அஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறைகளை கொடுக்கும் போது அதில் ஆபத்து இருக்கத்தான் செய்யும். அதே மாதிரி இந்த (eecp) சிகிச்சையை கொடுக்கும் போது எந்த மாதிரி ஆபத்து இருக்கும் என்று கேடீர்கள் என்றால் இந்த (eecp) சிகிச்சை முறை என்பது இது ஒரு முழுமையான (non – invasive) சிகிச்சை முறையாகும். இதில் அறுவை சிகிச்சை போன்று எதுவும் செய்வது கிடையாது. தினமும் 1 மணி நேரம் புறநோயாளிகளாக அதாவது மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. ஆகையால் இந்த சிகிச்சை முறை ஒரு (Aggressive) உடற்பயிற்சி என்று கூறுவோம். தினசரி 1 மணி நேரம் வீதம் 35 நாட்கள் கால்களில் உள்ள ரத்த ஓட்டத்தை இருதயத்திற்கு அதிகப்படுத்துகிறோம். அப்படி இருக்கும் போது நோயாளிகள் இந்த சிகிச்சை முறைக்கு வருவதற்கு முன்பே அந்த நோயாளியை (evaluate) செய்து சில ஆபத்து இருக்கின்ற நோயாளிகளை முன்பே தவிர்க்க வேண்டும். இந்த (eecp) சிகிச்சை முறை ஒரு அறுவை சிகிச்சையோ, அஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறையையோ ஒப்பிட்டு பார்த்தால் அதற்கான ஆபத்து மிக மிக குறைவுதான்.