Home | Transcriptions of Videos
Published on Jul 09, 2019
அதாவது EECP சிகிச்சை முறை, மருந்து மாத்திரைகள் இவை எல்லாம் எதற்கு கொடுக்கப்படுகிறது என்றால் ரத்த குழாயில் அடைப்பு உள்ளவர்களுக்கு இந்த மருந்து மாத்திரைகள் உட்கொள்வதினால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பினை குறைக்க முடியும். ஆனால் அனைவருக்கும் மாரடைப்பு வராது என்று கூறமுடியாது. (EECP) சிகிச்சை முறை இல்லாமல் வேறு என்ன சிகிச்சை முறை உள்ளது என்று பார்தீர்கள் என்றால் By Pass surgery, மற்றும் Angio plasty இப்பொழுது By pass, Angio plasty செய்துக் கொண்டாலும் கூட மாரடைப்பு வருவதினை முற்றிலுமாக தடுக்க முடியாது. மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பினை bypass சிகிச்சை (EECP) சிகிச்சை அல்லது மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதினால் குறைத்துக்கொள்ளலாம் எந்த இருதய நோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் மாரடைப்பு வராமல் இருக்க முடியுமா என்று கேட்டால் 100% கூற முடியாது.